ibrahim garden Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 23 Nov 2023 13:31:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg ibrahim garden Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு. https://www.kottakuppamtimes.com/8407/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b9%25e0%25ae%25bf-3 https://www.kottakuppamtimes.com/8407/#respond Thu, 23 Nov 2023 13:24:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8407 கோட்டக்குப்பம் பழைய பட்டணப்பாதை மற்றும் மகாத்மா காந்தி சாலையை இணைக்கும் பிரதான சாலையான கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேக்கமாக காணப்பட்ட வந்தது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதற்கு நிரந்தர...

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பழைய பட்டணப்பாதை மற்றும் மகாத்மா காந்தி சாலையை இணைக்கும் பிரதான சாலையான கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேக்கமாக காணப்பட்ட வந்தது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இதற்கு நிரந்தர தீர்வு வேண்டி பலமுறை அப்பகுதி மக்களால் மனு அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அதிகாரிகளும் இது சம்பந்தமாக பலமுறை ஆய்வு செய்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும், மழை நீர் வடிகாளுடன் கூடிய தரை தள தொட்டி அமைக்கும் பணி இன்று(23/11/2023) துவங்கப்பட்டது. இதன் மூலம் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் S.S ஜெயமூர்த்தி, நகராட்சி ஆணையர் புகேந்திரி, 21-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. சைதானி முஹமது கவுஸ், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8407/feed/ 0
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டனில் CCTV கண்காணிப்பு கேமரா அமைப்பு: குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை. https://www.kottakuppamtimes.com/6695/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b9%25e0%25ae%25bf-2 https://www.kottakuppamtimes.com/6695/#respond Sat, 14 May 2022 14:17:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6695 கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெரு முனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட வந்த நிலையிலும் எதுவும் பயனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை(11/05/2022) அன்று அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க, கவுன்சிலர் ஏற்பாட்டில் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில் குப்பை கொட்டுவார்கள் மீது அபராதம் மற்றும் வழக்கு பதியப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையும், மக்கள் பொருட்படுத்தாமல் அங்கு குப்பைகள்...

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டனில் CCTV கண்காணிப்பு கேமரா அமைப்பு: குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெரு முனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட வந்த நிலையிலும் எதுவும் பயனளிக்கவில்லை.

கடந்த புதன்கிழமை(11/05/2022) அன்று அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க, கவுன்சிலர் ஏற்பாட்டில் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில் குப்பை கொட்டுவார்கள் மீது அபராதம் மற்றும் வழக்கு பதியப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையும், மக்கள் பொருட்படுத்தாமல் அங்கு குப்பைகள் மீண்டும் கொட்டி வந்தனர். இதனால், குப்பைகள் கொட்டுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் குப்பைகள் கொட்டுவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் 21-வது வார்டு கவுன்சிலர் சைத்தானி கவுஸ் அவர்கள் தனது சொந்த செலவில் தற்பொழுது அப்பகுதியில் 4 சிசிடிவி கேமரா அமைத்துள்ளார். இதில், 3 கேமரா இப்ராஹிம் கார்டன் தெரு முனையிலும் மற்றும் பட்டினத்தார் தெரு பகுதியில் ஒரு கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், வீதிகளில் குப்பை கொட்டும் நபர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, குப்பை கொட்டும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டனில் CCTV கண்காணிப்பு கேமரா அமைப்பு: குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6695/feed/ 0
இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை. https://www.kottakuppamtimes.com/6684/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/6684/#respond Wed, 11 May 2022 14:02:42 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6684 கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெருமுனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது, இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் செய்தி பதிவிட்டது. குறிப்பாக, அதில் தெருமுனையில் LED லைட் பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது, அதன்படி அதன் மறுநாளே LED லைட் அங்கு பொருத்தப்பட்டது. தற்பொழுது, மேலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க, கோட்டக்குப்பம் நகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் “திடக்கழிவு மேலாண்மை...

The post இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெருமுனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது, இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் செய்தி பதிவிட்டது. குறிப்பாக, அதில் தெருமுனையில் LED லைட் பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது, அதன்படி அதன் மறுநாளே LED லைட் அங்கு பொருத்தப்பட்டது.

தற்பொழுது, மேலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க, கோட்டக்குப்பம் நகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் “திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி குப்பைகள் தெரு/சாலையோரம்/கால்வாய் முதலிய இடங்களில் கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தங்கள் இல்லங்களுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது மேற்கூறிய சட்டப்பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும். மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6684/feed/ 0
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம். https://www.kottakuppamtimes.com/6340/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/6340/#respond Tue, 19 Apr 2022 07:00:02 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6340 நமது வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம், நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அன்றாட தினசரி குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்தாலும், தெரு முனைகளிலும் மற்றும் காலி இடங்களிலும் குப்பைகள் சேர்ந்த வண்ணமே உள்ளது, முக்கியமாக கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில். இந்த பகுதியில், தினம் தினம் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தாலும் மறுநாள் காலை அதேபோல் குப்பை மேடாக காட்சி அளிக்கின்றது. இது தினசரி நடந்து...

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம். appeared first on Kottakuppam Times.]]>
நமது வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம், நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அன்றாட தினசரி குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்தாலும், தெரு முனைகளிலும் மற்றும் காலி இடங்களிலும் குப்பைகள் சேர்ந்த வண்ணமே உள்ளது, முக்கியமாக கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில்.

இந்த பகுதியில், தினம் தினம் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தாலும் மறுநாள் காலை அதேபோல் குப்பை மேடாக காட்சி அளிக்கின்றது. இது தினசரி நடந்து கொண்டே இருக்கின்றது.

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் வந்து குப்பைகளை தெரு முனையில் வீசி விட்டு செல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், தெருமுனை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதே.

இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படும் கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி.

மேலும், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாடுகள், நாய்கள் கிளறி விடுவதால் ரோடு முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன, அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மூக்கை பிடித்து செல்லும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகின்றது.

இந்த இடத்தின் எதிரில் தான் குழந்தைகள் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. அங்கன்வாடி மையம் அருகே சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

“சாலையோரங்களில் குப்பைகள் கழிவுகள் தேவையற்ற பொருட்களை கொட்ட கூடாது, மீறினால் எவ்வித முன்னறிவிப்புமின்றி வாகனங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் அதற்கான அபராத தொகையையும் வசூலிக்கப்படும்” என்ற அறிவிப்பு பேனர் இப்ராஹிம் கார்டன் தெரு முனையில் தொங்க விடப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் இதை பொருட்படுத்தாமல் அதன் கீழேயே குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.

மேலும், இந்த பகுதிகளில் குப்பைகள் மட்டுமின்றி, கோழி கழிவுகள், மீன் & இறால் கழிவுகள் மற்றும் குழந்தைகள் டயப்பர் என தினமும் கொட்டப்படுகிறது, என அப்பகுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த குப்பைகள் முழுவதும் மற்ற பகுதியில் இருந்து, இங்கு வந்து கொட்ட படுவதாக தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்வு தான் என்ன?

இந்தப் பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க தெரு முனையில் LED லைட் அமைக்கப்பட வேண்டும். இதனால் இரவு நேரங்களில் குப்பை கொட்டுவது தவிர்க்கப்படும்.

சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைத்து குப்பை கொட்டுவோர் மீது அதிகாரிகள் அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும்.

வீடுகளில் குப்பை சேகரிக்க வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் குப்பைகளை ஒப்படைக்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க தொழிலாளர்கள் வருகையில் பிரச்சனைகள் இருந்தால் தங்கள் பகுதியில் உள்ள கவுன்சிலரிடம் உங்கள் பிரச்சனையை எடுத்துரைக்கலாம்.

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டியது உபயோகிப்பாளரின் கடமையாகும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உரியவாறு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்தால் இன்னும் கூடுதல் சிறப்பு.

இறுதியாக, சுற்றுச்சூழலை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் தெருமுனைகளில் அல்லது காலி மனைகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டு, சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6340/feed/ 0