heavy rain Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 03 Nov 2022 07:00:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg heavy rain Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு. https://www.kottakuppamtimes.com/7460/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/7460/#respond Thu, 03 Nov 2022 07:00:03 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7460 கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ்...

The post கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், ஆரோவில், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

The post கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7460/feed/ 0
கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம். https://www.kottakuppamtimes.com/5321/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf-5 https://www.kottakuppamtimes.com/5321/#respond Mon, 08 Nov 2021 12:55:50 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5321 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை முதல் மிக கன மழை பொலிந்து வருகிறது.  கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாக வந்த தகவல்கள் அடிப்படையில் பேரூராட்சி ஊழியர்கள் ராட்சத டீசல் பம்ப் செட் மூலமும், ஜேசிபி இயந்திரங்கள் மூலமும்,...

The post கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை முதல் மிக கன மழை பொலிந்து வருகிறது. 

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாக வந்த தகவல்கள் அடிப்படையில் பேரூராட்சி ஊழியர்கள் ராட்சத டீசல் பம்ப் செட் மூலமும், ஜேசிபி இயந்திரங்கள் மூலமும், அங்கங்கே தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணி கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பாக துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கான மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5321/feed/ 0
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை. https://www.kottakuppamtimes.com/3933/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/3933/#respond Sun, 21 Feb 2021 08:04:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3933 கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. இதேபோல் புதுச்சேரி பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது....

The post கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

இதேபோல் புதுச்சேரி பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. இதனை, சரி செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோட்டகுப்பம் பகுதி புகைப்படங்கள்

புதுச்சேரி பகுதி புகைப்படங்கள்

The post கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3933/feed/ 0