Eb office Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 06 Oct 2023 07:09:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Eb office Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு. https://www.kottakuppamtimes.com/8278/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/8278/#respond Fri, 06 Oct 2023 07:03:24 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8278 கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் தொடர் போராட்டம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும், விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளர் (பொது)அவர்கள், SE அவர்கள், கண்டமங்கலம் செயற்பொறியாளர் (EE) அவர்கள் மற்றும் வானூர் வட்டாட்சியர் என அனைவருக்கும் இன்று ஒரே நாளில் தலைவர் (மாநில இணைச்செயலாளர்) அன்சர் பாஷா அவர்களின்...

The post மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் தொடர் போராட்டம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும், விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளர் (பொது)அவர்கள், SE அவர்கள், கண்டமங்கலம் செயற்பொறியாளர் (EE) அவர்கள் மற்றும் வானூர் வட்டாட்சியர் என அனைவருக்கும் இன்று ஒரே நாளில் தலைவர் (மாநில இணைச்செயலாளர்) அன்சர் பாஷா அவர்களின் தலைமையில், துணைத் தலைவர் பயாஸ், பொருளாளர் கமால் ஹசேன், இணை செயலாளர் சாகுல் ஹமீத் மற்றும் துணைச் செயலாளர் துபைல் அஹமத் கொண்ட குழுவினர் மனு அளித்தனர். இவர்களுடன், விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் பொருளாளர் முபாரக் அலி உடன் இருந்தார்.

The post மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8278/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. https://www.kottakuppamtimes.com/7433/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f-2 https://www.kottakuppamtimes.com/7433/#respond Mon, 17 Oct 2022 13:19:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7433 கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம்‌ நகராட்சியில்‌ நாள்தோறும்‌ சுமார்‌ 4 முறைக்கும்‌ மேலாக மின்தடை ஏற்படுகிறது. காலை வேளையில்‌ ஏற்படும்‌ மின்‌ தடையால்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும் வேலைக்கு...

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம்‌ நகராட்சியில்‌ நாள்தோறும்‌ சுமார்‌ 4 முறைக்கும்‌ மேலாக மின்தடை ஏற்படுகிறது. காலை வேளையில்‌ ஏற்படும்‌ மின்‌ தடையால்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும் வேலைக்கு செல்லும்‌ பெரியோர்கள்‌ மிகவும்‌ அவதிக்குள்ளாவதோடு மட்டுமல்லாமல்‌, நகராட்சியின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடுவதால்‌ பொதுமக்கள் அனைவரும்‌ பெறும்‌ சிரமத்திலும்‌, மன உலைச்சலிலும்‌ காலை நேரத்தை கடக்கிறார்கள்‌. காரணம்‌ கேட்டு தங்களை தொடர்புகொண்டால்‌ பிரச்சனையை சரி செய்து விட்டோம் வந்துவிடும்‌ என்று கூறுகிறீர்கள்‌. ஆனால்‌, மீண்டும்‌ சில மணித்துளிகளில்‌ மின்‌ தடை ஏற்படுகிறது. இது முன்பு கூறியதுபோல்‌ நாலொன்றுக்கு 4 முதல்‌ 5 முறை மின்‌ தடை ஏற்படுகிறது. நாங்கள்‌ விசாரித்ததில்‌ தமிழகத்தின்‌ வேறு பகுதிகளில்‌ இவ்வாளவு அதிக மின்தடையில்லை. ஏன்‌ நமது நகராட்சிப்‌ பகுதியில் மட்டும்‌ இவ்வாறு அடிக்கடி மின்‌ தடை ஏற்படுகிறது? அதற்கான காரணம்‌ என்ன என்று விளக்கவும்‌. மேலும்‌, மாதம்‌ ஒருமுறை பராமரிப்பிற்காக ஒருநாள்‌ மின்சாரத்தை தவறாமல்‌ நிறுத்துகிறீர்கள்‌. இந்த நாட்களில்‌ மின்மாற்றிகளையும்‌, பழுதடைந்துள்ள பழைய மின்‌ கடத்திகளையும்‌ முறையாக பராமரிக்கின்றீர்களா? என்று எங்களுக்கு ஐயமாக உள்ளது. விளக்கவும்‌” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, நகர செயலாளர் ஜரீத், நகர பொருளாலர் முஹம்மது யூசுப் (ஃபைசல்) மற்றும் உறுப்பினர்கள் அமீர்ஜான் (ம) ரியாஸ்தீன் உடன் இருந்தனர்.

மேலும், பத்து நாட்களுக்குள் மின் வினியோகம் சரி செய்ய வேண்டி வலியுறுத்தப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7433/feed/ 0
கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி. https://www.kottakuppamtimes.com/6807/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/6807/#respond Thu, 16 Jun 2022 14:03:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6807 கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் (லோ-வோல்ட்டேஜ்) காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, நேற்று(15-06-2022) இரவு கோட்டகுப்பம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் நீடித்து வந்த நிலையில், சுமார் 11:30 மணி அளவில் மழை பொழிந்ததும், இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மீண்டும் விடியற்காலை அளவில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. மேலும்...

The post கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் (லோ-வோல்ட்டேஜ்) காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, நேற்று(15-06-2022) இரவு கோட்டகுப்பம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் நீடித்து வந்த நிலையில், சுமார் 11:30 மணி அளவில் மழை பொழிந்ததும், இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மீண்டும் விடியற்காலை அளவில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறைந்த அழுத்த அளவு மின்சாரமே வருவதால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்ஸி,  கிரைண்டர்,  பிரிட்ஜ், மின்விசிறி,  தொலைக்காட்சி மற்றும் மின்மோட்டார்களை முறையாக, முழுமையாக இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இதனால் மின் சாதன பொருட்கள் பாதிப்படைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நமது பகுதியில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குறைந்த மின்னழுத்தத்தால் இரவு நேரங்களில் மின் விசிறியை கூட இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, கோட்டக்குப்பத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டும் எனவும், நமது பகுதிக்கு வரவேண்டிய துணை மின்நிலையத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6807/feed/ 0
கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு! https://www.kottakuppamtimes.com/5206/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/5206/#respond Wed, 22 Sep 2021 07:25:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5206 சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் மின்தடையை ஒழுங்குபடுத்தி சரியான மின் வினியோகம் வழங்க வேண்டும், மேலும் கோட்டக்குப்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய மின் கம்பிகளை, மின்சார தளவாட பொருட்களை அகற்றி விட்டு, புதிய மின்...

The post கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு! appeared first on Kottakuppam Times.]]>
சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அடிக்கடி ஏற்படும் மின்தடையை ஒழுங்குபடுத்தி சரியான மின் வினியோகம் வழங்க வேண்டும், மேலும் கோட்டக்குப்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய மின் கம்பிகளை, மின்சார தளவாட பொருட்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பிகளை பெறுத்தி பழுதுபட்ட மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும், மின்னழுத்தம் சீராக இல்லாத பகுதிகளில் புதிய மின் மாற்றி அமைக்க கோரியும், மேலும் மின் தடைக்கு பெரிதும் காரணமாக கருதப்படும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டி வலியுறுத்தியும் இன்று கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் அவர்களிடம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாவட்ட தலைவர் வி. ஆர். முஹம்மது இப்ராஹிம் தலைமையில் மனு வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட மனுவை பெற்றுக்கொண்டு அதில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகளை ஏற்று, இந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில வாரங்களில் இந்த குறைகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்.

இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முகமது, நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர இளைஞரணி தலைவர் அமீன், நகர துணைத் தலைவர் அலி அகமது, விழுப்புரம் மாவட்ட எம் எஸ் எஃப் பொறுப்பாளர்கள் முஹம்மது அலி, முஹம்மதுஉசைன், நகர எம்எஸ் எஃப் பொறுப்பாளர்கள் ஹாஜாத் அலி, சேட்டு, முகமது காலித், நகர இளைஞரணி அப்பாஸ், திமுக 8-வது வார்டு கிளை செயலாளர் பாபு மற்றும் ரஹ்மானியா பள்ளிவாசல் முத்தவல்லி அஷ்ரப் அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5206/feed/ 0