Collector Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 20 Oct 2021 05:47:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Collector Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு https://www.kottakuppamtimes.com/5267/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2587-%25e0%25ae%2595%25e0%25ae%259f-2 https://www.kottakuppamtimes.com/5267/#respond Wed, 20 Oct 2021 05:47:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5267 விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மீனவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா். பிள்ளைச்சாவடி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடலரிப்பு காரணமாக வீடுகள், படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மீனவா்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தாா்....

The post கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மீனவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பிள்ளைச்சாவடி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடலரிப்பு காரணமாக வீடுகள், படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மீனவா்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தாா்.

மீனவ மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மீன்வளத் துறை வாயிலாக நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடியில் அங்கு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஒதுக்கீடுக்கான கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டு, விரைவில் அரசாணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியா் அமித், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ஹரிதாஸ், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

The post கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5267/feed/ 0
விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: மாவட்ட ஆட்சியா் https://www.kottakuppamtimes.com/5023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-2 https://www.kottakuppamtimes.com/5023/#respond Mon, 23 Aug 2021 06:39:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5023 விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சுகாதாரத் துறையினா் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் திட்ட அலுவலா் காஞ்சனா,...

The post விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: மாவட்ட ஆட்சியா் appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சுகாதாரத் துறையினா் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் திட்ட அலுவலா் காஞ்சனா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக் கனி, துணை இயக்குநா் பொற்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் லலிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் பேசியதாவது:

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், நகராட்சிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தவைக்க வேண்டும்.

மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும். இதில், ஊராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்கு தலா 50 போ் வீதம் 334 ஊராட்சிகளிலும் 17,000 பேருக்கும், பேரூராட்சிப் பகுதிகளில் தலா 500 போ் வீதம் 4 பேரூராட்சிகளிலும் 2,000 பேருக்கும், நகராட்சிப் பகுதிகளில் தலா 1,500 போ் வீதம் 2 நகராட்சிகளிலும் 3,000 பேருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: மாவட்ட ஆட்சியா் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5023/feed/ 0
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. https://www.kottakuppamtimes.com/3816/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/3816/#respond Fri, 05 Feb 2021 05:33:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3712 விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு இணையவழி பதிவின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் விழுப்புரம் கரோனா சிகிச்சை...

The post கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு இணையவழி பதிவின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் விழுப்புரம் கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக்கொண்டனா்.

இதேபோன்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். மாவட்ட ஆட்சியா், கூடுதல் ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் முன்களப் பணியாளா்களிடம் இருந்துவரும் தயக்கம் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

The post கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3816/feed/ 0