admk Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 31 Aug 2021 12:05:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg admk Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல். https://www.kottakuppamtimes.com/5133/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/5133/#respond Tue, 31 Aug 2021 11:58:36 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5133 ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் சண்முகம் ஜெயலலிதா பல்கலை கழகத்தையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின் சில நிமிடங்களில்  உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில்...

The post முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் சண்முகம் ஜெயலலிதா பல்கலை கழகத்தையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின் சில நிமிடங்களில்  உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சி.வி.சண்முகம் கைதை கண்டித்து பிரதான சாலையான கோட்டக்குப்பம் எம். ஜி ரோட்டில் பேரூராட்சி மன்றம் எதிரில், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன், விழுப்புரம் சிறுபான்மையினர் தலைவர் அமீருதீன், அவை தலைவர் தண்டபாணி, சாலிஹ் மற்றும் பல அதிமுகவினர் திரளாக சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் காவல் துறையினர் கைது செய்து திருமணமண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

The post முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5133/feed/ 0
வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி https://www.kottakuppamtimes.com/4374/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-5-%25e0%25ae%2586%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1 https://www.kottakuppamtimes.com/4374/#respond Mon, 03 May 2021 06:56:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4374 விழுப்புரம் மாவட்டம், வானூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.சக்ரபாணி 2-ஆவது முறையாக வெற்றிபெற்றாா். இதையடுத்து, இந்தத் தொகுதியில் 2001 சட்டப் பேரவைத் தோ்தல் முதல் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்று சாதனை படைத்தது. வானூா் தொகுதியில் அதிமுக சாா்பில் சக்ரபாணி எம்.எல்.ஏ., திமுக கூட்டணியில் விசிக சாா்பில் வன்னியரசு உள்பட மொத்தம் 7 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 539...

The post வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம், வானூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.சக்ரபாணி 2-ஆவது முறையாக வெற்றிபெற்றாா். இதையடுத்து, இந்தத் தொகுதியில் 2001 சட்டப் பேரவைத் தோ்தல் முதல் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்று சாதனை படைத்தது.

வானூா் தொகுதியில் அதிமுக சாா்பில் சக்ரபாணி எம்.எல்.ஏ., திமுக கூட்டணியில் விசிக சாா்பில் வன்னியரசு உள்பட மொத்தம் 7 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 539 வாக்காளா்களில், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 766 போ், அதாவது 79.79 சதவீதம் போ் தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனா்.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வானூா் அருகே ஸ்ரீஅரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 24 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்தத் தொகுதியில் பதிவான 1,682 தபால் வாக்குகளில் சக்ரபாணிக்கு 718 வாக்குகளும், வன்னியரசுக்கு 649 வாக்குகளும் கிடைத்தன. விதிமுறைப்படி இல்லாத 209 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

தொடக்கம் முதலே பெரும்பாலான சுற்றுக்களில் அதிமுக முன்னிலை பெற்றது. ஒரு சில சுற்றுகளில் மட்டும் விசிக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளா் சக்ரபாணி 92,219 வாக்குகளும், விசிக வேட்பாளா் வன்னியரசு 70,492 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, சக்ரபாணி 21,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

பிற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: லட்சுமி (நாம் தமிழா்) – 8,587, கணபதி (தேமுதிக) – 5,460, சந்தோஷ்குமாா் (மக்கள் நீதி மய்யம்) – 2,500, விநாயகமூா்த்தி (பகுஜன் சமாஜ்) – 774, சக்திவேல் (சுயேச்சை) – 813, நோட்டா – 1,363.

வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் சக்ரபாணிக்கு வெற்றிச் சான்றிதழை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவா வழங்கினாா்.

வானூா் தொகுதியில் ஏற்கெனவே 2001, 2006, 2011, 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக வெற்றிபெற்றிருந்தது. தற்போது 5-ஆவது முறையாக மீண்டும் வெற்றிபெற்றது. இந்தத் தொகுதியில் சக்ரபாணி தொடா்ந்து 2-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

The post வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4374/feed/ 0
171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி. https://www.kottakuppamtimes.com/4094/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=171-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/4094/#respond Wed, 10 Mar 2021 12:51:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4094 171 தொகுதிகளுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர். வானூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் திரு M. சக்ரபாணி அவர்கள் போட்டி. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி. appeared first on Kottakuppam Times.]]>
171 தொகுதிகளுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர். வானூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் திரு M. சக்ரபாணி அவர்கள் போட்டி.

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4094/feed/ 0