கல்வி Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 24 Aug 2020 14:21:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg கல்வி Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு https://www.kottakuppamtimes.com/2707/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25be%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-40-%25e0%25ae%259a%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/2707/#respond Mon, 24 Aug 2020 14:21:09 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2707 புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தனியாா் பள்ளிகள் இணையதளம் வழியே மாணவா்களுக்கு கல்வி போதித்து வருகின்றன. இருப்பினும், மாணவா்களிடமிருந்து முழுக் கல்வி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுள்ளது. ஆனால், தனியாா் பள்ளிகள் கடந்தாண்டு மாணவா்களிடமிருந்து வசூலித்த கட்டணத்தில் 40 சதவீதத்தை...

The post தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தனியாா் பள்ளிகள் இணையதளம் வழியே மாணவா்களுக்கு கல்வி போதித்து வருகின்றன. இருப்பினும், மாணவா்களிடமிருந்து முழுக் கல்வி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுள்ளது. ஆனால், தனியாா் பள்ளிகள் கடந்தாண்டு மாணவா்களிடமிருந்து வசூலித்த கட்டணத்தில் 40 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பாக புதுவை பள்ளி கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ர கவுடு உத்தரவின் பேரில் அனைத்து ஆய்வு அதிகாரிகள் மூலமாக தனியாா் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை உயா் நீதிமன்றத்தில் தனியாா் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடா்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவாக சில வழிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2019-20 ஆம் கல்வியாண்டில் வசூலித்த கல்வி கட்டணத்தில் 40 சதவீதம் மட்டும் முன் கட்டணமாக மாணவா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். அந்தக் கட்டணத்தை ஆக. 31 ஆம் தேதிக்குள் மாணவா்களிடம் வசூலித்துக் கொள்ளலாம்.

2019-20 இல் வசூலிக்க வேண்டிய நிலுவைக் கட்டணத்தை மாணவா்களிடமிருந்து செப்.30 ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம். கடந்த கல்வியாண்டில் மாணவா்கள் நிலுவைத் தொகையுடன், முழுக் கட்டணத்தையும் செலுத்தி இருந்தால், அதே கட்டணத்தை தற்போதும் வசூலிக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது.

2019-20 இல் மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 35 சதவீதத்தை பள்ளிகள் திறக்கப்பட்ட நாளிலிருந்து 2 மாதத்துக்குள் வசூலித்துக் கொள்ளலாம். மீதம் ஏதேனும் கட்டணம் இருந்தால், கல்விக் கட்டண குழுவின் இறுதி முடிவுக்குப் பிறகு தீா்மானிக்கலாம்.

எனவே, புதுவையில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளும் இந்த உத்தரவில் உள்ள வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

The post தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2707/feed/ 0
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு https://www.kottakuppamtimes.com/2664/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=10-%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/2664/#respond Fri, 07 Aug 2020 13:52:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2664 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு! தமிழக அரசு அறிவிப்பு. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு...

The post 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு appeared first on Kottakuppam Times.]]>
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு! தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு
https://tnresults.nic.in,
https://dge1.tn.nic.in,
https://dge2.tn.nic.in

ஆகிய இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

The post 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2664/feed/ 0
தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! https://www.kottakuppamtimes.com/2482/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-11-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/2482/#respond Thu, 16 Jul 2020 03:31:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2482 தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத் தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இணையதளத்தின் வழியாகவும் மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Websites: http://tnresults.nic.in/ http://dge1.tn.nic.in/ http://dge.tn.nic.in/

The post தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத் தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இணையதளத்தின் வழியாகவும் மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Websites:

http://tnresults.nic.in/

http://dge1.tn.nic.in/

http://dge.tn.nic.in/

The post தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2482/feed/ 0
செப்.,17 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்: இன்று முதல் பதிவு செய்யலாம் https://www.kottakuppamtimes.com/2478/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25aa%25e0%25af%258d-17-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/2478/#respond Wed, 15 Jul 2020 13:20:33 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2478 செப்டம்பர் 17ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதற்காக இன்று (ஜூலை 15) மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம். செப்.,17ம் தேதி முதல் இன்ஜி., கவுன்சிலிங் நடைபெறும். அக்டோபர் 15க்குள்...

The post செப்.,17 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்: இன்று முதல் பதிவு செய்யலாம் appeared first on Kottakuppam Times.]]>
செப்டம்பர் 17ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதற்காக இன்று (ஜூலை 15) மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம். செப்.,17ம் தேதி முதல் இன்ஜி., கவுன்சிலிங் நடைபெறும். அக்டோபர் 15க்குள் கவுன்சிலிங்கை முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சான்றிதழ் சரிபார்க்க மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் நேரில் வர வேண்டாம். ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான 52 உதவி மையங்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன; மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இன்ஜி., சேர்க்கை குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும். கலை, அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். கல்லூரிகள் கொரோனா தனிமை முகாம்களாக இருப்பதால் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post செப்.,17 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்: இன்று முதல் பதிவு செய்யலாம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2478/feed/ 0
ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! https://www.kottakuppamtimes.com/2430/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/2430/#respond Thu, 09 Jul 2020 08:02:48 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2430 தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் இயங்கவில்லை மேலும் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தொடங்கிவிட்டார்கள் ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வருகின்றதுஇந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும்...

The post ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! appeared first on Kottakuppam Times.]]>
தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் இயங்கவில்லை மேலும் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தொடங்கிவிட்டார்கள் ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வருகின்றது
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது என்றும் தொலைக்காட்சி  வழியாகபாடம்  நடத்தவே திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தொலைகாட்சி மூலம்  வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயார்நிலையில் உள்ளன

The post ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2430/feed/ 0
1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்! https://www.kottakuppamtimes.com/2298/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=1-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-12-%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/2298/#respond Tue, 30 Jun 2020 14:38:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2298 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வு எழுதாமலே 1ம் வகுப்பு  முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர்.  இந்நிலையில் மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கப்படாததால், இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், 1ம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள அனைத்து பாட...

The post 1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்! appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்வு எழுதாமலே 1ம் வகுப்பு  முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கப்படாததால், இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், 1ம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள அனைத்து பாட பிரிவுகளுக்கும் புது புத்தகங்களை டவுன்லோட் செய்து கொண்டு வீட்டில் இருந்தே படிக்கலாம்.

புத்தகங்களை டவுன் லோடு செய்ய கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.

The post 1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2298/feed/ 0
ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு https://www.kottakuppamtimes.com/66/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590-%25e0%25ae%258f-%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25b5%25e0%25ae%259a-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a31 https://www.kottakuppamtimes.com/66/#respond Sat, 04 Jul 2015 09:53:32 +0000 http://www.kottakuppamtimes.com/?p=66 புதுச்சேரி:ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி வகுப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி தேர்வு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு சேர்மன் பாலமுருகன் விண்ணப்பங்களை வழங்கினார்.மேலும் இது குறித்து சேர்மன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:2015-16ம் ஆண்டிற்கு ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு கடந்த 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. வரும் 10ம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வில்...

The post ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரி:ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி வகுப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி தேர்வு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு சேர்மன் பாலமுருகன் விண்ணப்பங்களை வழங்கினார்.மேலும் இது குறித்து சேர்மன் விடுத்துள்ள செய்தி
குறிப்பு:2015-16ம் ஆண்டிற்கு ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு கடந்த 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

வரும் 10ம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறும் 20 பேருக்கு சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டிற்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் செலவுகளை மேம்பாட்டுக் கழகம் ஏற்றுக் கொள்ளும். சென்னையில் தங்கி பயிற்சி பெற விருப்பமுள்ள இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் காரைக்காலில் கிடைக்கும், விபரங்களுக்கு 0413-2202076, 04369-226300 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

The post ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/66/feed/ 0