tangedco Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 19 Aug 2024 08:07:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg tangedco Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல். https://www.kottakuppamtimes.com/9028/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/9028/#respond Sun, 18 Aug 2024 08:38:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9028 கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு என்பது வாடிக்கையாக்கிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை(17/08/2024) அன்று மட்டும் 15 முறை பவர் கட் செய்யப்பட்டது. மேலும், அன்று இரவு நீண்ட நேரம் பவர் கட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டக்குப்பம் மின்சார வாரியம் எதிரில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படவில்லை. மேலும், காந்தி ரோட்டில் இருபுறமும்...

The post கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு என்பது வாடிக்கையாக்கிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை(17/08/2024) அன்று மட்டும் 15 முறை பவர் கட் செய்யப்பட்டது. மேலும், அன்று இரவு நீண்ட நேரம் பவர் கட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டக்குப்பம் மின்சார வாரியம் எதிரில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படவில்லை. மேலும், காந்தி ரோட்டில் இருபுறமும் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பிறகு, கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை நள்ளிரவில் 1 மணி நேரத்திற்கும் மேல் வாகனங்கள் சம்பித்து நின்றது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் இளமின் ஆய்வாளரிடம் பொதுமக்கள் சராசரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு போலீசாரம், மின்சார வாரிய அதிகாரிகளும் ஞாயிற்றுக்கிழமை காலை சமாதான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனால் நள்ளிரவில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று(18/08/2024) மின்வெட்டு பிரச்சினை குறித்து கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள், மின் அதிகாரிகள் இடையே சமரச கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஏழுமலை தலைமையில் ஊழியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அப்போது மின்வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். 15 நாட்களுக்குள் புது பீடர் மூலம் சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9028/feed/ 0
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. https://www.kottakuppamtimes.com/8951/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%2585 https://www.kottakuppamtimes.com/8951/#respond Wed, 14 Aug 2024 08:19:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8951 கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் நாளொன்றுக்கு பல மணி நேரம் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டான்ஜெட்கோ...

The post தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் நாளொன்றுக்கு பல மணி நேரம் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னிலையில் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் நேற்று(13/08/2024) சந்தித்து கோட்டக்குப்பத்தில் நிலவிவரம் தொடர் மின்வெட்டைக் குறித்தும், மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் படும் இன்னல்களை பற்றியும் எடுத்துரைத்தனர். இதையெடுத்து, இதற்கான சரியான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

இந்நிகழ்வில், கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் A. அன்சர் பாஷா, செயலாளர் முஹம்மது வக்கீல், பொருளாளர் கமால் ஹசேன், துணைத் தலைவர் A. முஹம்மது இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8951/feed/ 0