shaadi mahal Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 12 Jun 2022 09:55:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg shaadi mahal Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6800/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6800/#respond Sun, 12 Jun 2022 09:49:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6800 அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2022“, வருகின்ற ஜூன் 26-ம் தே‌தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. +2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற...

The post கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2022, வருகின்ற ஜூன் 26-ம் தே‌தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

+2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையும் நிர்ணயிக்கும். ஆகவே, இந்த முடிவினை தெளிவாக எடுக்க வேண்டும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு பல கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.

ஆதலால், நமது கோட்டக்குப்பத்தை சார்ந்த அனைத்து 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து கூகுள் படிவத்தையும் பூர்த்தி செய்து, தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(அல்லது)

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு உங்களுடைய பெயர், தந்தை பெயர், வயது, தொலைப்பேசி எண், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற விவரங்கள் டைப் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி தங்களின் வருகையை உறுதி செய்யலாம்.

10-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A.R.SATHIK BASHA: +91 8056515736
S. Julfi: +91 944207020

11 & 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A. Hajath Ali: +91 9944342179
Abdul Malik: +91 9790968698

மேலும், நமதூரை சார்ந்த 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் முதல் மூன்று மாணவர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

ஆகவே, இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6800/feed/ 0
புதுப்பிக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால். https://www.kottakuppamtimes.com/6667/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/6667/#respond Sun, 08 May 2022 03:29:03 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6667 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால் 1983-ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது 39 ஆண்டுகள் கடந்து சிறப்பாக இயங்கி வருகிறது. கோட்டக்குப்பத்தில் முஸ்லிம் திருமணங்கள் பெரும்பாலானவை இங்கு நடைபெறுவது வழக்கம். மேலும் திருமணம் மட்டுமின்றி பல விசேஷங்களுக்கு, நமதூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் தரை தளம் மட்டும் இயங்கி வந்த நிலையில், மக்களின் தேவைகளை அறிந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாமிஆ மஸ்ஜித் மண்டபத்தின் மேல்...

The post புதுப்பிக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால் 1983-ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது 39 ஆண்டுகள் கடந்து சிறப்பாக இயங்கி வருகிறது. கோட்டக்குப்பத்தில் முஸ்லிம் திருமணங்கள் பெரும்பாலானவை இங்கு நடைபெறுவது வழக்கம். மேலும் திருமணம் மட்டுமின்றி பல விசேஷங்களுக்கு, நமதூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் தரை தளம் மட்டும் இயங்கி வந்த நிலையில், மக்களின் தேவைகளை அறிந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாமிஆ மஸ்ஜித் மண்டபத்தின் மேல் கூரை அமைக்கலாம் என திட்டமிட்டு, 2016-ஆம் ஆண்டு மேற்கூரை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால், தரைத்தளம் மற்றும் முதல் தளம் தங்களின் விசேஷங்களுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த சில வருடங்களாக அங்கு பதிக்கப்பட்டிருந்த தரை சலவைக்கல் பழுதடைந்து காணப்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் வகையில், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் கடந்த மாதம் பராமரிப்பு பணி மேற்கொண்டது. இதில் மண்டபத்தின் உள் பகுதியில் உள்ள பழைய சலவைக்கல் முழுவதும் அகற்றப்பட்டு, புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேடை(ஸ்டேஜ்), நடை பகுதி மற்றும் பாத்ரூம் பகுதிகளிலும் புதிய டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இருந்த பழைய டியூப் லைட்டுகளை முழுவதும் அகற்றப்பட்டு விட்டு, புதிய LED டியூப் லைட்டுகள் மற்றும் புதிய 18 மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உட்புற மண்டபம் முன் இருந்தது போல் இல்லாமல், தற்பொழுது மிகவும் வெளிச்சமாகவும், அழகாகவும் காட்சியளிக்கின்றது.

தற்போது அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08/05/2022) ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post புதுப்பிக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6667/feed/ 0