robbery Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 18 Jan 2022 06:45:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg robbery Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை. https://www.kottakuppamtimes.com/5652/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5652/#respond Tue, 18 Jan 2022 06:41:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5652 தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைகழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு செல்ல வசதியாக இவர் கடந்த சில ஆண்டுகளாக கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  பொங்கல் பண்டிகையையொட்டி சிவராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு கோட்டக்குப்பம் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு...

The post ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை. appeared first on Kottakuppam Times.]]>
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைகழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு செல்ல வசதியாக இவர் கடந்த சில ஆண்டுகளாக கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

பொங்கல் பண்டிகையையொட்டி சிவராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு கோட்டக்குப்பம் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி சென்றதை நோட்டமிட்டு வீட்டின் கதவை திறந்து நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.

இதுகுறித்து சிவராமகிருஷ்ணன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

பொதுமக்கள் எந்நேரமும் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5652/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், பொருட்கள் கொள்ளை https://www.kottakuppamtimes.com/5144/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b5%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5144/#respond Thu, 02 Sep 2021 05:44:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5144 விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மகாத்மாகாந்தி சாலையில் பிரசித்தி பெற்ற சுகந்தர மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோட்டக்குப்பம் எம்.ஜி.சாலையை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 53) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலை திறந்து பூஜைகள் செய்வதற்காக வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், கோவிலுக்குள் சென்று பார்த்தபோது...

The post கோட்டக்குப்பத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், பொருட்கள் கொள்ளை appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மகாத்மாகாந்தி சாலையில் பிரசித்தி பெற்ற சுகந்தர மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோட்டக்குப்பம் எம்.ஜி.சாலையை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 53) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலை திறந்து பூஜைகள் செய்வதற்காக வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், கோவிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவிலில் இருந்த 1½ அடி உயர வெள்ளி வேல், சந்தன கிண்ணம், கவசம், பன்னீர் சொம்பு உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் சுமார் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மேற்கண்ட பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உள்ள இந்த கோவிலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– நன்றி மாலைமலர்

The post கோட்டக்குப்பத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், பொருட்கள் கொள்ளை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5144/feed/ 0