puducherry Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 22 Sep 2021 12:31:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg puducherry Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு https://www.kottakuppamtimes.com/5222/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5222/#respond Wed, 22 Sep 2021 12:31:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5222 புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.  இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று அறிவித்துள்ளார்.  அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி...

The post 3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று அறிவித்துள்ளார். 

அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  முதல் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கும், 3ம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெடட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

The post 3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5222/feed/ 0