Prophet Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 18 Jun 2022 15:31:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Prophet Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/6810/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2586-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8-12 https://www.kottakuppamtimes.com/6810/#respond Sat, 18 Jun 2022 15:16:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6810 முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் செவ்வாய்க்கிழமை(21/06/2022) மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது. இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று(17/06/2022) மாலை கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி...

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் செவ்வாய்க்கிழமை(21/06/2022) மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று(17/06/2022) மாலை கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உலமா சபை நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

இதில் பல்வேறு ஆலோசனை அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி

  1. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் வக்கிரமான பேச்சை கண்டித்து,
  2. உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து,

அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், உலமா சபை நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கோட்டக்குப்பத்தில் வருகின்ற 21-ம்தேதி செவ்வாய்கிழமை மாலை 3 மணி அளவில், பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கி காயிதே மில்லத் ஆர்ச் வழியாக நகராட்சி திடல் வரை பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை அனைத்து கடைகளையும் அடைத்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்யுமாறு வியாபாரி சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் அழைப்பு விடுத்துள்ளது.

The post கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6810/feed/ 0