power cut Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 16 Jun 2022 14:06:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg power cut Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி. https://www.kottakuppamtimes.com/6807/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/6807/#respond Thu, 16 Jun 2022 14:03:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6807 கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் (லோ-வோல்ட்டேஜ்) காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, நேற்று(15-06-2022) இரவு கோட்டகுப்பம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் நீடித்து வந்த நிலையில், சுமார் 11:30 மணி அளவில் மழை பொழிந்ததும், இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மீண்டும் விடியற்காலை அளவில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. மேலும்...

The post கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் (லோ-வோல்ட்டேஜ்) காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, நேற்று(15-06-2022) இரவு கோட்டகுப்பம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் நீடித்து வந்த நிலையில், சுமார் 11:30 மணி அளவில் மழை பொழிந்ததும், இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மீண்டும் விடியற்காலை அளவில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறைந்த அழுத்த அளவு மின்சாரமே வருவதால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்ஸி,  கிரைண்டர்,  பிரிட்ஜ், மின்விசிறி,  தொலைக்காட்சி மற்றும் மின்மோட்டார்களை முறையாக, முழுமையாக இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இதனால் மின் சாதன பொருட்கள் பாதிப்படைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நமது பகுதியில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குறைந்த மின்னழுத்தத்தால் இரவு நேரங்களில் மின் விசிறியை கூட இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, கோட்டக்குப்பத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டும் எனவும், நமது பகுதிக்கு வரவேண்டிய துணை மின்நிலையத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6807/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி https://www.kottakuppamtimes.com/6247/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/6247/#respond Wed, 13 Apr 2022 08:33:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6247 கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, அதிகாலை நோன்பு நோற்கும் நேரங்களில் மின்வெட்டு அதிகமாக உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த திங்கட்கிழமை, அதிகாலையில் மழை பெய்த நிலையில், மின்சாரம் தடை செய்யப்பட்டது. ‌அதேபோல், கடந்த 3 நாட்களாக மழை இல்லாவிட்டாலும் அதிகாலையில் மின்சாரம் தொடர்ந்து...

The post கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, அதிகாலை நோன்பு நோற்கும் நேரங்களில் மின்வெட்டு அதிகமாக உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை, அதிகாலையில் மழை பெய்த நிலையில், மின்சாரம் தடை செய்யப்பட்டது. ‌அதேபோல், கடந்த 3 நாட்களாக மழை இல்லாவிட்டாலும் அதிகாலையில் மின்சாரம் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு என்ன உரிய காரணம் என்று தெரியவில்லை? காரணம் என்ன இருந்தாலும், தினம் தினம் அதிகாலை மின்சாரம் தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், அதிகாலை நேரங்களில் மின் வினியோகம் இல்லாததால் குடிநீரும் தடை செய்யப்படுகிறது, இதனால் நோன்பாளிகள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

திடீர் மின்சாரம் தடை ஆவதும், மீண்டும் மின்சாரம் வருவதும் தொடர் நிகழ்வாகி வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி போன்ற அத்தியாவசிய எலக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்படைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, கோட்டக்குப்பத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து, நமது பகுதிக்கு வரவேண்டிய துணை மின்நிலையத்தை உடனே அமைக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6247/feed/ 0
கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன? https://www.kottakuppamtimes.com/3186/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25af%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/3186/#respond Thu, 26 Nov 2020 07:30:03 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3186 நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முற்பகல் அளவில் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. அதன் பிறகு, மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு நிவர் புயல் கரையை கடந்தது. அதன் தாக்கத்தால் கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. புயலின் போது ஏராளமான இடங்களில் இரவு நேரத்தில் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள்...

The post கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன? appeared first on Kottakuppam Times.]]>
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முற்பகல் அளவில் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. அதன் பிறகு, மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு நிவர் புயல் கரையை கடந்தது. அதன் தாக்கத்தால் கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.

புயலின் போது ஏராளமான இடங்களில் இரவு நேரத்தில் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

தற்போது புயலின் தாக்கம் குறைந்த நிலையில், மின் வினியோகம் எப்பொழுது வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இது சம்பந்தமாக கோட்டகுப்பம் டைம்ஸ் குழு, மின் வாரியத்திடம் தொடர்பு கொண்டபோது:

ஆரோவில் பகுதியில் மரங்களை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது எனவும், இந்த பணி முடிந்த பின் இன்று இரவுக்குள் மின்வினியோகம் திரும்ப வழங்கப்படும் என தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3186/feed/ 0