Old madras street Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 22 Dec 2020 08:18:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Old madras street Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள். https://www.kottakuppamtimes.com/3428/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/3428/#respond Tue, 22 Dec 2020 08:18:37 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3428 கோட்டக்குப்பம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் குறிப்பாக கோட்டக்குப்பம் பழையா பட்டணப்பாதை, M.G. ரோடு, பர்கத் நகர் போன்ற பல பகுதிகளில், தினமும் காலை மாலை நேரங்களில், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள், பரபரப்புடன் வாகனங்களில் செல்லும்போது கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. அதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. சில இடங்களில் சாலையில் நடுவில் மாடுகள் படுத்துக் கிடக்கின்றன. சாலைகளில் செல்லும் மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று...

The post கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் குறிப்பாக கோட்டக்குப்பம் பழையா பட்டணப்பாதை, M.G. ரோடு, பர்கத் நகர் போன்ற பல பகுதிகளில், தினமும் காலை மாலை நேரங்களில், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள், பரபரப்புடன் வாகனங்களில் செல்லும்போது கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. அதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. சில இடங்களில் சாலையில் நடுவில் மாடுகள் படுத்துக் கிடக்கின்றன.

சாலைகளில் செல்லும் மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு அங்குமிங்கும் ஓடுவதால், அவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிடோர் அச்சத்துடன் அலறியடித்து நடுங்குகிறார்கள். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையின் நடுவில் படுத்துக் கிடக்கும் மாடுகளைக்கண்டு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் திடீரென பிரேக் அடிப்பது, பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் எற்பட வாய்ப்புள்ளது.

இதனால், கால்நடைகளை வளர்ப்பவர்களை அவற்றை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கோட்டக்குப்பம் பேரூராட்சியை மக்கள் கேட்டு கொள்கின்றனர்.

The post கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3428/feed/ 0
கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல். https://www.kottakuppamtimes.com/3392/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d-4 https://www.kottakuppamtimes.com/3392/#respond Mon, 21 Dec 2020 13:08:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3392 கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக, மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை, மீண்டும் மூடாமல் அப்படியே திறந்து விட்ட காரணத்தால் கடந்த சில திங்களாக பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. நேற்று இது சம்பந்தமாக இணையதளத்திலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை அறிந்த திமுக விழுப்புரம் மாவட்ட வர்த்தக அணி...

The post கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக, மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை, மீண்டும் மூடாமல் அப்படியே திறந்து விட்ட காரணத்தால் கடந்த சில திங்களாக பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

நேற்று இது சம்பந்தமாக இணையதளத்திலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை அறிந்த திமுக விழுப்புரம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயமூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்துல் சமது ஆகியோர், இன்று காலை பார்வையிட்டு உடணடி நடவடிக்கை எடுக்க கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் பேசி சம்மந்தப்பட்ட பொரியாளருடன் கலந்து ஆலோசித்தனர்.

இது சம்மதமாக அதிகாரிகள் நாளை முதற்கட்டமாக பட்டினத்தார் தெரு மற்றும் மரைக்காயர் தெரு 1 ஆகிய தெருக்களுக்கு செல்லும் பாதையை சரிசெய்யபடும் எனவும், மேலும் மற்ற பகுதிகளில் விரைவில் சரிசெய்யபடும் என்றும் அதுவரை மணல்மூட்டை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இவர்களுடன் கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு, மீடியா சாதிக், அஸ்கர் அலி மற்றும் முகமது இப்ராஹிம் அவர்கள் உடன் இருந்தனர்.

The post கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3392/feed/ 0
உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்? https://www.kottakuppamtimes.com/3368/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/3368/#respond Sun, 20 Dec 2020 05:44:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3368 கோட்டக்குப்பம் டிச:20கோட்டக்குப்பத்தில் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை மீண்டும் மூடாமல் அப்படியே திறந்து விட்ட காரணத்தால் மீண்டும் அதன் முன் குப்பைகள் சேர்ந்து அடைப்புகள் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து இதுவரை 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கீழே...

The post உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்? appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் டிச:20
கோட்டக்குப்பத்தில் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை மீண்டும் மூடாமல் அப்படியே திறந்து விட்ட காரணத்தால் மீண்டும் அதன் முன் குப்பைகள் சேர்ந்து அடைப்புகள் ஏற்பட காரணமாக உள்ளது.

மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து இதுவரை 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

உயிர்பலி ஏற்படும் முன் பேரூராட்சி நிர்வாகம் வாய்க்கால்களும் மேல் சிலாப்புகள் அமைத்து மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3368/feed/ 0
கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி…. https://www.kottakuppamtimes.com/2583/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d-3 https://www.kottakuppamtimes.com/2583/#respond Tue, 28 Jul 2020 11:30:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2583 கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் சாலை அமைக்கும் பணிக்காக வேலைகள் தொடங்கியது. அதன் முதல் கட்டமாக பழைய பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறா தோப்பு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு தேவி தியேட்டர் அருகில் இருந்த சில வீடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்பகுதியில் இருந்த சில வீட்டினர் நாங்கள் இதை பட்டா இடத்தில் தான் கட்டியுள்ளோம்,...

The post கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி…. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் சாலை அமைக்கும் பணிக்காக வேலைகள் தொடங்கியது. அதன் முதல் கட்டமாக பழைய பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறா தோப்பு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டது.

அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு தேவி தியேட்டர் அருகில் இருந்த சில வீடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அப்பகுதியில் இருந்த சில வீட்டினர் நாங்கள் இதை பட்டா இடத்தில் தான் கட்டியுள்ளோம், எங்கள் வீட்டை இடிக்க கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அந்த இடத்தில் மேற்கொண்டு வேலைகள் செய்யாமல் மற்ற பகுதிகளில் வேலை செய்து வந்தனர். மேலும் சாலை அமைப்பதற்காக ஜேசிபி மூலம் ரோடுகளில் பழைய ஜல்லிகளை கீறி விட்டு அதன் மேல் புதிய ஜல்லி போடுவதற்கான ஆயத்தப் பணிகளை கடந்த இரண்டு நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மேற்படி தேவி தியேட்டர் அருகில் இருந்த முன்னர் எதிர்ப்பு தெரிவித்த வீடுகளில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

வீட்டின் முன் பகுதிகள் ஜேசிபி எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை காவல்துறை பாதுகாப்புடன் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வீட்டின் முன்பகுதியில் இடித்த பொழுது வீட்டு உரிமையாளர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் சமாதானம் செய்து அதிகாரிகள் அவர்கள் கண்முன்னே வீட்டின் முன் பகுதியை இடித்தனர்.

சுமார் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது என்று காரணம் கூறி வீட்டின் முன்பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.

வீட்டு உரிமையாளர்களின் கண்முன்னே அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருவதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி…. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2583/feed/ 0
கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி… https://www.kottakuppamtimes.com/2503/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/2503/#respond Sun, 19 Jul 2020 04:30:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2503 கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் புஸ்தானியா பள்ளிவாசல் முதல் புறாதோப்பு வரை புதிய சாலை போடும் பணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்கு முன்னதாக சாலையில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதன் பின்னர் பழைய பட்டிணப் பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறாதோப்பு வரை பழைய சாலையை JCP எந்திரம் மூலம் சுரண்டப்பட்டு, கடந்த 15 நாட்களாக அப்படியே கிடக்கிறது. நடுக்குப்பம், புதுத்தெரு, ஆறாவது வார்டு,...

The post கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி… appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் புஸ்தானியா பள்ளிவாசல் முதல் புறாதோப்பு வரை புதிய சாலை போடும் பணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக சாலையில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அதன் பின்னர் பழைய பட்டிணப் பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறாதோப்பு வரை பழைய சாலையை JCP எந்திரம் மூலம் சுரண்டப்பட்டு, கடந்த 15 நாட்களாக அப்படியே கிடக்கிறது.

தார் ஜல்லிகள் சாலையிலிருந்து அப்புறப்படுத்தாமல் அப்படியே இருப்பதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

நடுக்குப்பம், புதுத்தெரு, ஆறாவது வார்டு, தேவி தியேட்டர் சாலை, கோட்டக்குப்பம் பகுதி மக்களின் முக்கிய சாலையாக இருப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த சாலையையே பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

2 சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் வரை இந்த சுரண்டப்பட்ட தார் ஜல்லிகளின் மேல் வாகனங்களில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அதிலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிதிவண்டிகளில் செல்பவர்களும் தங்கள் வாகனங்கள் இந்த பாதையில் கடக்கும் போது அடிக்கடி டயர் பஞ்சர் ஏற்பட்டு மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம் என்று தங்களின் மன வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

முக்கியமான சாலையை செப்பனிடும் பணியை ஆரம்பித்த நமது உள்ளூர் நிர்வாகம், அந்தப் பணியை போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் விரைந்து அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோட்டக்குப்பத்தில் முக்கிய சாலையாக இது இருப்பதால் பெரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பொதுமக்களின் சிரம நிலையை கண்டு மிக விரைவில் இந்த சாலை பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொது மக்களின் முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.

பழைய குடிநீர் தண்ணிர் குழாய்களை மாற்றி அமைக்க கோரிக்கை:

மேலும் இந்த சாலையை போடுவதற்கு முன்பு இதன் அடியில் செல்லும் பழைய குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குழாய்களை பதிக்க வேண்டும் என்றும் பல மனுக்கள் நமது பேரூராட்சி மன்றத்தில் பல குழுவினரால் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் தார் சாலை அமைக்கும் பொழுது, இப்பொழுது இருக்கும் தார் சாலைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அதே மட்டத்திலே அமைக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

அந்த கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும். சாலை அமைத்த பிறகு மறுபடியும் குழாய் பதிப்பதற்காக சாலையை உடைத்து அதை விரைவில் பழுதடையச் செய்யக்கூடாது. சாலை பணி துவங்கவதர்கு முன்பே, குழாய் பதிக்கும் பணிகளை முடித்து மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக அமைய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

பரகத் நகர் மற்றும் ஐயூப் கார்டன் செல்லும் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதி:

பரகத் நகர் மெயின் ரோடு 1 -2, ஐயூப் கார்டன் பாதைகள் தடைபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதே போன்று தற்போது காந்தி ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் வாய்க்கால் பணியால் மேயர் முத்துப்பிள்ளை பாதை, பரகத் நகரின் டேங்க் ரோடு பாதை, பரகத் நகர் மெயின் ரோடு பாதை, மற்றும் ஐயூப் கார்டன் பாதை போன்ற பாதைகள் தடைபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அவர்களின் வாகனங்களை வீட்டிற்குள் விடாமல் ரோட்டியிலேயே விட்டுச் செல்வதால் மிகவும் அச்சத்தில் உள்ளார்கள்.

ஆகையால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாத காலமாகவே தங்கள் இல்லங்களுக்கு செல்ல பெரும் பகீரத முயற்சி எடுத்துக்கொண்டு சென்று வருகிறார்கள். இப்பணிகளை விரைந்து முடித்து அவர்களுக்கு வழியை சரி செய்து கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

கொரானா காலத்தில் மக்கள் பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகிய நிலையில், இதுபோன்ற நெருக்கடிகளினாலும் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பத்தையும் வலியுறுத்தப்படுகிறது.

புகைப்படங்கள்:

மேலும் உங்களது கருத்துகளை கமெண்டில் தெரிவிக்கலாம்.

The post கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி… appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2503/feed/ 0
கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். https://www.kottakuppamtimes.com/2320/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/2320/#respond Fri, 03 Jul 2020 11:30:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2320 கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதை என்பது முற்காலத்தில் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்துள்ளது. தற்போது அந்த சாலை உள்ளூர் சாலையாக சுருங்கிவிட்டது. ஈசிஆர் போன்ற நெடுஞ்சாலைகள் வந்ததால், அந்த சாலையின் பயன்பாடு உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. முன்பு சுமார் 36 அடி அகலம் இருந்த அந்தச் சாலை காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால், இன்று பத்து அடி அகலத்திற்கும் குறைவாக சுருங்கிவிட்டது. கோட்டக்குப்பம்...

The post கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதை என்பது முற்காலத்தில் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்துள்ளது.

தற்போது அந்த சாலை உள்ளூர் சாலையாக சுருங்கிவிட்டது. ஈசிஆர் போன்ற நெடுஞ்சாலைகள் வந்ததால், அந்த சாலையின் பயன்பாடு உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. முன்பு சுமார் 36 அடி அகலம் இருந்த அந்தச் சாலை காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால், இன்று பத்து அடி அகலத்திற்கும் குறைவாக சுருங்கிவிட்டது.

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் ஆரம்பிக்கும் இந்த பழைய பட்டினம் பாதை என்பது தற்போதுள்ள இந்திரா நகர், பாரதி நகர் பகுதியில் முடிவடைகிறது.

இந்த சாலை தொடங்கும் பகுதியான முத்தியால்பேட்டை கோட்டகுப்பம் முதல் வாய்க்கால் வரை சிறிது அகலமாக காணப்பட்டாலும், வாய்க்காலில் இருந்து புறா தோப்பு வரை குறுகி காணப்படுகிறது.

முன்பு காலத்தில் லாரி போன்ற கனரக வாகனங்கள் எளிதாக சென்று வந்த நிலையில் தற்போது ஆட்டோக்கள் செல்வதே பெரும் சிரமமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த பழைய பட்டின பாதையை மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் புதியசாலை அமைக்கும் பணி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக தற்போது அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.

சுமார் 20 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அதனால் சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் துணைகொண்டு அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

The post கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2320/feed/ 0