municipality Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 24 Aug 2021 14:54:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg municipality Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம். https://www.kottakuppamtimes.com/5028/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5028/#respond Tue, 24 Aug 2021 14:33:01 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5028 இன்று (24-08-2021) தமிழக சட்டசபையில் நடைபெற்ற உள்ளாட்சி மானியக் கோரிக்கையில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தி அமைச்சர் கே.என். நேரு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் இதுவரையில் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது. இன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் வரவேற்று கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அருகில் ஒன்றுகூடி பட்டாசு...

The post கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
இன்று (24-08-2021) தமிழக சட்டசபையில் நடைபெற்ற உள்ளாட்சி மானியக் கோரிக்கையில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தி அமைச்சர் கே.என். நேரு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் இதுவரையில் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது. இன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்று கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் வரவேற்று கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அருகில் ஒன்றுகூடி பட்டாசு வெடித்து தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷமிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்வில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5028/feed/ 0