kottakuppam municipality Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 15 Feb 2025 16:32:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam municipality Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம் https://www.kottakuppamtimes.com/9310/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf-9 https://www.kottakuppamtimes.com/9310/#respond Sat, 15 Feb 2025 16:32:51 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9310 கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட ஈசிஆர் பகுதிகளில் அடிக்கடி குப்பைகள் மர்ம நபர்களால் எரியூட்டப்படுகிறது. கோட்டக்குப்பம் மேயர் ரத்தினம் பிள்ளை மெயின் ரோடு கடைசியில் , இசிஆர் அருகில் இன்று(15/02/2025) மாலை மர்ம நபர்களால் குப்பைகள் மற்றும் மின்சாதன கழிவுகள் தீயிடப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டு மக்கள் பெரும் அச்சமடைந்தனர். மேலும், அக்கம் பக்கத்தினர் தீ மேலும் பரவாமல் தடுக்க தண்ணீர் கொண்டு வந்து அந்த தீயை அணைத்து கட்டுக்குள்...

The post கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட ஈசிஆர் பகுதிகளில் அடிக்கடி குப்பைகள் மர்ம நபர்களால் எரியூட்டப்படுகிறது. கோட்டக்குப்பம் மேயர் ரத்தினம் பிள்ளை மெயின் ரோடு கடைசியில் , இசிஆர் அருகில் இன்று(15/02/2025) மாலை மர்ம நபர்களால் குப்பைகள் மற்றும் மின்சாதன கழிவுகள் தீயிடப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டு மக்கள் பெரும் அச்சமடைந்தனர். மேலும், அக்கம் பக்கத்தினர் தீ மேலும் பரவாமல் தடுக்க தண்ணீர் கொண்டு வந்து அந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேபோல், கடந்த திங்கட்கிழமை அன்று, சின்ன கோட்டக்குப்பம் அருகில் இசிஆர் பகுதியில் மின்சாதன கழிவுகள் எரிக்கப்பட்டன. அப்போதும் ஈசிஆர் பகுதி முழுவதும் கரும்புகைகள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். நகராட்சி வாகனம் மூலம் தீ அணைக்கப்பட்டது.

இந்த தொடர்ச்சியான குப்பை எரிப்பு சம்பவங்களால், காற்று மாசுபடுவதுடன், அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதே போல் சம்பவம் ஈசிஆர் பகுதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, நகராட்சி நிர்வாகம் ஈசிஆர் பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9310/feed/ 0
ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம். https://www.kottakuppamtimes.com/9305/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%25af%25e0%25af%2582%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/9305/#respond Sat, 15 Feb 2025 05:46:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9305 சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. நேற்று, ஒரு கார் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மேலும், எம்.ஜி....

The post ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம். appeared first on Kottakuppam Times.]]>
சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. நேற்று, ஒரு கார் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மேலும், எம்.ஜி. ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பும் போது மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கவிழும் அபாயமும் உள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்று வரும் பாதையாக இருப்பதால், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அடுத்து ஏதேனும் விபரீதம் நடக்கும் முன், உள்ளூர் நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9305/feed/ 0
கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/9300/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/9300/#respond Sat, 15 Feb 2025 05:30:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9300 கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில், ஆதி திராவிடர் மக்களுக்காக 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட 10 கடைகளைக் கொண்ட வணிக வளாகம், 28 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருப்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டக்குப்பத்தில் ஆதி திராவிடர் மக்களின் மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளன. இந்த கடைகள் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால்,...

The post கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில், ஆதி திராவிடர் மக்களுக்காக 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட 10 கடைகளைக் கொண்ட வணிக வளாகம், 28 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருப்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டக்குப்பத்தில் ஆதி திராவிடர் மக்களின் மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளன. இந்த கடைகள் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் தெரிவித்தனர். திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பலமுறை கோரிக்கைகள் விடப்பட்டாலும், கடைகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணிக வளாகத்தின் பூட்டுகளை உடைத்து திறந்ததுடன், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9300/feed/ 0
கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. https://www.kottakuppamtimes.com/9295/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf-8 https://www.kottakuppamtimes.com/9295/#respond Tue, 11 Feb 2025 06:46:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9295 கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும் கொசுத்தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முக்கியமாக, ஒரு பகுதியில் மட்டும் கொசு மருந்து தெளித்துவிட்டு, மற்ற பகுதிகளில் தெளிக்காமல் விடுவதால், கொசு உற்பத்தி குறையாமல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும்...

The post கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும் கொசுத்தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக, ஒரு பகுதியில் மட்டும் கொசு மருந்து தெளித்துவிட்டு, மற்ற பகுதிகளில் தெளிக்காமல் விடுவதால், கொசு உற்பத்தி குறையாமல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக கொசு மருந்து தெளித்து, கொசு உற்பத்தியை தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொசு அதிகரிப்பால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், நீர்நிலைகளை சரிபார்த்தல், குப்பை கிடங்குகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

The post கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9295/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் அடிக்கல் https://www.kottakuppamtimes.com/9279/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-27 https://www.kottakuppamtimes.com/9279/#respond Mon, 10 Feb 2025 14:49:06 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9279 கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணி இன்று காலை 9:30 மணியளவில் துவங்கியது. நகர மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி மற்றும் நகராட்சி ஆணையர் புகேந்தி ஆகியோர் பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். தற்போது உள்ள கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் 3.85 கோடி ரூபாய் செலவில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த கட்டிடம்...

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் அடிக்கல் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணி இன்று காலை 9:30 மணியளவில் துவங்கியது. நகர மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி மற்றும் நகராட்சி ஆணையர் புகேந்தி ஆகியோர் பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

தற்போது உள்ள கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் 3.85 கோடி ரூபாய் செலவில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர், நகராட்சி பொறியாளர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் அடிக்கல் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9279/feed/ 0
கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடி மையம் முன் கழிவுநீர் தேக்கம்: டெங்கு அச்சம் https://www.kottakuppamtimes.com/9198/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-20-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/9198/#respond Tue, 24 Dec 2024 07:34:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9198 கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு ரஹ்மத் நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் எதிரே நகராட்சி பூங்கா அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பூங்கா பணிகளுக்காக அப்பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்த கழிவுநீர் வாய்க்கால் மூடப்பட்டதால், கழிவுநீர் அங்கன்வாடி மையத்தின் வாசல் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள்...

The post கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடி மையம் முன் கழிவுநீர் தேக்கம்: டெங்கு அச்சம் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு ரஹ்மத் நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் எதிரே நகராட்சி பூங்கா அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பூங்கா பணிகளுக்காக அப்பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்த கழிவுநீர் வாய்க்கால் மூடப்பட்டதால், கழிவுநீர் அங்கன்வாடி மையத்தின் வாசல் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவும் அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதியை பார்வையிட்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சுகாதார சீர்கேடு உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், குழந்தைகளின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

The post கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடி மையம் முன் கழிவுநீர் தேக்கம்: டெங்கு அச்சம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9198/feed/ 0
கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்! https://www.kottakuppamtimes.com/9119/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8-5 https://www.kottakuppamtimes.com/9119/#respond Thu, 05 Dec 2024 16:14:42 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9119 புயலோ பெருமழையோ ஏற்பட்டால் கோட்டக்குப்பம் பகுதியில் முதலில் பாதிக்கப்படுவது பர்கத் நகர் பகுதியாக இருந்து வருகிறது. அதன்படி தற்பொழுது ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலில் பர்கத் நகர் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் வந்தால் மழை வரும், மழை நீரால் அப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதன் பிறகு, நகராட்சி செயல்பாட்டால் அந்த தேங்கிய தண்ணீரை வெளியேற்றப்படும் இதுவே வாடிக்கையாக உள்ளது. அது போன்று இப்போது வந்த...

The post கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்! appeared first on Kottakuppam Times.]]>
புயலோ பெருமழையோ ஏற்பட்டால் கோட்டக்குப்பம் பகுதியில் முதலில் பாதிக்கப்படுவது பர்கத் நகர் பகுதியாக இருந்து வருகிறது. அதன்படி தற்பொழுது ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலில் பர்கத் நகர் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வந்தால் மழை வரும், மழை நீரால் அப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதன் பிறகு, நகராட்சி செயல்பாட்டால் அந்த தேங்கிய தண்ணீரை வெளியேற்றப்படும் இதுவே வாடிக்கையாக உள்ளது.

அது போன்று இப்போது வந்த புயலால் பெரும் பாதிப்பு இல்லாவிட்டாலும் 13, 12, 11, 10, 7, 8, 9-வது எக்ஸ்டென்ஷன் போன்ற குறுக்குத் தெருக்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் இரு தினங்கள் பெறும் அவதிப்பட்டார்கள். சில வீடுகளில் வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகிவிட்டது.

இது ஆண்டாண்டு காலமாக வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய வடகிழக்கு பருவமழையில் ஜமியத் நகர் பகுதி முழுவதும் தண்ணீரால் மூழ்கி அப்பகுதி மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. அப்பகுதியில் வீடு கட்டி குடியேறிய குடியிருப்பு வாசிகளுக்கு ஒவ்வொருவருக்கும் லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களின் பெரும் பாதிப்பாக கருதப்படுகிறது. அவ்வாறு ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்த அந்தப் பகுதியில் மூன்று நாட்கள் கழித்து குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெரும் பாதிப்பு ஏற்படாத பர்கத் நகர் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக மக்களுக்கு சரியான குடிநீர் வினியோகம் இல்லாமல் அல்லல்பட்டு வருகிறார்கள்.

மக்களின் துயர் துடைக்க 22-வது மற்றும் 15-வது வார்டு நகரமன்ற உறுப்பினர்கள் பெரும் முயற்சி செய்து பகுதி மக்களின் பெறும் கஷ்டத்தை சிறிது போக்க குடிநீர் லாரிகளின் மூலமாக கொடுத்து வருகிறார்கள். இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் தண்ணீர் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் பூர்த்தியாகாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

குடிநீரை சேமித்து வைக்கும் கீழ்நிலை தொட்டி (சம்பு) அமைந்திருக்கும் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் குடிநீரை சேமித்து வைக்கவும், சேமித்த நீரை மேல் தொட்டிக்கு ஏற்றவும் முடியவில்லை என்று வழக்கமான காரணங்களை கூறி வருகிறார்கள்.

இந்த நிலை கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. வெள்ள நீர் சூழும் பகுதியில் சம்பு தொட்டியை கட்டினால், தண்ணீர் வரத்தானே செய்யும் அந்த அடிப்படை விசயம் தெரிந்தவர்கள் அப்பகுதியில் வெள்ளநீர் சூழாத வகையில் அப்பகுதியை இதுவரையில் பாதுகாக்காது ஏன்? ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக நகராட்சி நிர்வாகம் கூறுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக, ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தாழ்வான அப்பகுதியை வெள்ளநீர் சூழாத வகையில் மேடாக இதுவரையும் மாற்றி வைக்காமல் சிறிது மழை பெய்தாலும் அப்பகுதியில் வெள்ள நீ சூழ்ந்து விடுகிறது. இதனால் தண்ணீர் ஏற்றுவதற்கான சூழ்நிலை அமையாமல் அதற்கான சுவிட்சைகளை போடுவதற்கு முடியாமல் ஊழியர்கள் தவிப்பதையும் காரணமாக சொல்லி வருகிறார்கள்.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வரி இனங்களை அதிக அளவில் வசூலித்து வரும் கோட்டக்குப்பம் நகராட்சி, பர்கத் நகர் பகுதியை A-zone என்று அறிவித்துவிட்டு அதிகப்படியான வரி வசூல் செய்து கொண்டு அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இந்த 10 ஆண்டுகளாக இதே காரணங்களை சொல்லி அப்பகுதி மக்களை வஞ்சித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆண்டுதோறும் ஏற்படும் பருவ மழையில் அடிக்கடி மூழ்கும் அப்பகுதியை வெள்ளம் சூழா வண்ணம் பாதுகாக்க இதுவரையில் நிரந்தரமான திட்டம் தீட்டாமல் தற்காலிக ஏற்பாடுகளை செய்து அப்பகுதி மக்களை கஷ்டப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை முதல் சரியான குடிநீர் கிடைக்காமல் கடந்த ஆறு நாட்களாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அப்பகுதி மக்களின் சிரமத்தை அறிந்து தனக்காக வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை பாதுகாக்கும் நோக்கில் நகர மன்ற உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்தாலும் அவர்களின் அதிகப்படியான சக்தியை செலவு செய்து அவர்கள் வேலை செய்தாலும் அப்பகுதி மக்களின் தேவைகளை அவர்களால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மிகவும் அவர்களும் சிரமப்படுகிறார்கள்.

இந்த அவல நிலையை நகராட்சி நிர்வாகம் தற்காலிக சமாளிப்பாக இல்லாமல் வருங்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்கா வண்ணமும் இடர் காலங்களில் சீரான குடிநீர் வழங்க கூடிய வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதில், இன்னும் ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் குடிநீர் வழங்கக்கூடிய கீழ்நிலை தொட்டியும் அப்பகுதி மக்கள் அன்றாடம் வெளியேற்றும் கழிவுநீரை சேகரிக்கும் தொட்டியும் ஒரே இடத்தில் அமைந்து இருப்பது இன்னும் வியப்புக்குரியது.

தற்போது சூழ்ந்துள்ள வெள்ளத்தில் குடிநீர் தொட்டி நீரும், கழிவுநீர் தொட்டி நீரும் ஒன்றாக கலந்திருப்பது பெரும் ஆபத்தாக உள்ளது. இவ்வாறு சரியான திட்டமிடல் இல்லாமல் இரு தொட்டிகளையும் ஒரே இடத்தில் அமைத்திருப்பது மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கழிவுநீர் வெளியேற்ற வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பல போராட்டங்கள் செய்த நிலையில் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியை அமைத்து அங்கிருந்து மோட்டார் மூலம் கழிவு நீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டது. அந்த கழிவு நீரை வெளியேற்றுவதற்கு பல தடவை கோரிக்கை மனு கொடுத்தும் செய்யாத நிலையில் மக்கள் பெரும் போராட்டம் செய்ததின் விளைவாகவே இந்த கழிவுநீர் வெளியேற்றதற்கான வழிவகை செய்தார்கள்.

அதேபோன்று, தற்போது குடிநீர் தொட்டி அருகே வெள்ளநீர் சூழாமல் இருக்க போராட்டத்தை இந்த நகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்து காத்திருக்கிறதா? அப்போதுதான் அதற்கு வழிவகை செய்வார்களா என்று அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.

அனைத்து வசதிகளையும் ஒருங்கேபெற்ற இக்காலகட்டத்திலும் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது.

தற்போது பர்கத் நகர் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்பட்டு இன்று மாலை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. எனினும் மழை மீண்டும் வந்தால் அதே பழைய நிலைமைக்கு தள்ளப்படும். பர்கத் நகரின் இந்த பரிதாப நிலைக்கு எப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!??

The post கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9119/feed/ 0
கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்: வரலாறு காணாத மழையால் மக்கள் தவிப்பு. https://www.kottakuppamtimes.com/9112/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2583%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/9112/#respond Sun, 01 Dec 2024 14:50:02 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9112 வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதி கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி, வெள்ளிக்கிழமை ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது. இந்த ஃபெஞ்சல் புயலானது சனிக்கிழமை மாலை கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் நள்ளிரவில் 11:30 மணியிலிருந்து 1 மணி வரை மரக்காணம் அருகே கரையை கடந்தது....

The post கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்: வரலாறு காணாத மழையால் மக்கள் தவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதி கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி, வெள்ளிக்கிழமை ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது.

இந்த ஃபெஞ்சல் புயலானது சனிக்கிழமை மாலை கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் நள்ளிரவில் 11:30 மணியிலிருந்து 1 மணி வரை மரக்காணம் அருகே கரையை கடந்தது. புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால், பர்கத் நகர், ஜமியத் நகர், இந்திரா நகர், எம்ஜி ரோடு, இப்ராஹிம் கார்டன், ஐயூப் கார்டன், மரைக்காயர் தெரு, பழைய பட்டினப்பாதை போன்ற பல பகுதிகளில் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

மேலும் ஜமியத் நகர், சமரச நகர், தௌலத் நகர், அபிஷேக் நகர் போன்ற பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்ததால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சுமார் நள்ளிரவில் 3 மணி அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டு, கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மஹாலில் தங்க வைத்தனர்.

வெகு நேரம் கழித்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர், மீதமுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். வெள்ள பாதிப்பால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் முற்றிலும் பழுதடைந்தன.

மேலும், பல பகுதிகளில் ராட்சசன் மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஷாதி மஹாலில் பேரிடர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

புயலின் காரணமாக நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்பொழுது வரை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வினியோகம் நாளை காலை 11 மணி முதல் படிப்படியாக வழங்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்: வரலாறு காணாத மழையால் மக்கள் தவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9112/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்? https://www.kottakuppamtimes.com/9104/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-26 https://www.kottakuppamtimes.com/9104/#respond Sun, 01 Dec 2024 07:12:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9104 கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியத்தால் ஜமியத் நகர், சமரச நகர், பர்கத் நகர், சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், எம்ஜி ரோடு, இப்ராஹிம் கார்டன், மரைக்காயர் தெரு, பழைய பட்டினப்பாதை போன்ற பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக ஜமியத் நகர் பகுதி வெள்ளைக்காடாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தற்போது வரை ஒருவர்கூட தங்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது....

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்? appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியத்தால் ஜமியத் நகர், சமரச நகர், பர்கத் நகர், சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், எம்ஜி ரோடு, இப்ராஹிம் கார்டன், மரைக்காயர் தெரு, பழைய பட்டினப்பாதை போன்ற பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக ஜமியத் நகர் பகுதி வெள்ளைக்காடாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தற்போது வரை ஒருவர்கூட தங்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் எந்தவித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது, நகராட்சி நிர்வாகத்தின் தவறான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. பிற பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சி மட்டும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற இயற்கை சீற்றங்களுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்டு. ஆனால், கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் தனது கடமையை சரியாக செய்யத் தவறிவிட்டது. இந்த சம்பவம், நகராட்சி நிர்வாகத்தின் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

The post கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9104/feed/ 0
கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சியிடம் மனு https://www.kottakuppamtimes.com/9079/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a8-2 https://www.kottakuppamtimes.com/9079/#respond Wed, 13 Nov 2024 14:11:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9079 கோட்டக்குப்பம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையரிடம் இன்று (13/11/2024) மனு அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக கட்டிடம், துணை மின்நிலையம், அரசு பொது மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை, சார் பதிவாளர் அலுவலகம், புதைவிட மின் விநியோகம், அரசு நவீன நூலகம், மின்தகனமையம்,...

The post கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சியிடம் மனு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையரிடம் இன்று (13/11/2024) மனு அளிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலக கட்டிடம், துணை மின்நிலையம், அரசு பொது மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை, சார் பதிவாளர் அலுவலகம், புதைவிட மின் விநியோகம், அரசு நவீன நூலகம், மின்தகனமையம், நவீன பொதுக் கழிப்பிடம், அரசு இ-சேவை மையம், பாதாள கழிவுநீர் அமைப்பு, ஆவின் பால் நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் நகராட்சி மேற்கொண்ட பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய நகராட்சி ஆணையர், இரண்டு நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை தயார் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். நகராட்சி தலைவர், மக்கள் நலக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

The post கோட்டக்குப்பம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சியிடம் மனு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9079/feed/ 0