kottakuppam kuwait jamath Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 10 Feb 2024 14:50:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg kottakuppam kuwait jamath Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு. https://www.kottakuppamtimes.com/8557/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%259c-7 https://www.kottakuppamtimes.com/8557/#respond Sat, 10 Feb 2024 14:48:43 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8557 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ராஜதானி ஓட்டலில் வெள்ளிக்கிழமை(09/02/2024) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தின் சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் கலிலுல்லாஹ் இறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அழகிய கடன் திட்ட பொறுப்பாளர் முஹம்மது ரபீக் வரவேற்புரை நிகழ்த்தி கலந்து...

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ராஜதானி ஓட்டலில் வெள்ளிக்கிழமை(09/02/2024) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தின் சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் கலிலுல்லாஹ் இறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அழகிய கடன் திட்ட பொறுப்பாளர் முஹம்மது ரபீக் வரவேற்புரை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்றார்.

ஜமாத்தின் தலைமை உரையாக தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஜமாத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார். ஜமாத்தின் பொதுச்செயலாளர் முஹம்மது கஜ்ஜாலி ஜமாத்தின் சிறப்பம்சங்களையும் பற்றி எடுத்துரைத்து 2024- 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.

கடந்த வருடம் (2023) என்னென்ன செயல் திட்டங்களை பற்றி விளக்கமாக ஜமாத்தின் பொருளாளர் முஹம்மது ஆரிப் உரை நிகழ்த்தினார். இந்த ஆண்டின் ஆண்டறிக்கையை ஜமாத்தின் துணை பொருளாளர் குத்தூஸ் உறுப்பினர் மத்தியில் வாசித்துக் காட்டினார்.

சிறுசேமிப்பு திட்டத்தை பற்றியும் அது எப்படி செயல்படுகிறது, அதன் நோக்கங்கள் பற்றி ஜமாஅத்தின் சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் கலிலுல்லாஹ் எடுத்துரைத்தார்.

இறுதியாக சையத் சாதிக் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், பெருவாரியான குவைத் ஜமாத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8557/feed/ 0
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா. https://www.kottakuppamtimes.com/7584/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%259c-6 https://www.kottakuppamtimes.com/7584/#respond Sat, 14 Jan 2023 12:25:56 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7584 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவும் மற்றும் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, நேற்று(13/01/2023) மாலை குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ஹீர் ரன்ஜா ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தின் ஆலோசகர் ஜனாப் முபாரக் உசேன் அவர்கள் இறைமறையின் திரு வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்கள். ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பொதுச்செயலாளர் ஜனாப். முஹம்மது ரபீக் அவர்கள்...

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவும் மற்றும் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, நேற்று(13/01/2023) மாலை குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ஹீர் ரன்ஜா ஓட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தின் ஆலோசகர் ஜனாப் முபாரக் உசேன் அவர்கள் இறைமறையின் திரு வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்கள்.

ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பொதுச்செயலாளர் ஜனாப். முஹம்மது ரபீக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்றார்கள்.

ஜமாத்தின் தலைமை உரையாக தலைவர் ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜமாத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

அதற்கடுத்து ஜமாத்தின் துணைத் தலைவர் ஜனாப் முஹம்மது கஜ்ஜாலி, ஜமாத்தின் சிறப்பம்சங்களையும் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்பதை பற்றி எல்லாம் விளக்கமாக எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார்.

அடுத்ததாக ஜமாத்தின் சிறுசேமிப்பு திட்டம் எப்படி செயல்படுகின்றது என்பதனை பற்றி சிறு சேமிப்பு திட்டத்தின் பொறுப்பாளர் ஜனாப். இக்பால் பாஷா அவர்கள் உரை நிகழ்த்தினார்.

ஜமாத்தின் whatsapp தளம் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி ஊடக செயலாளர் ஜனாப் சையத் சாதிக் அவர்கள் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.

ஜமாஅத் கடந்த வருடங்களில் என்னென்ன செயல் திட்டங்களை நமது ஊருக்கும் நமது உறுப்பினர்களுக்கும் செய்திருக்கிறோம் என்பதை பற்றி மிக விளக்கமாக ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் முஹம்மது ஆரிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அடுத்து இந்த ஆண்டின் ஆண்டறிக்கையை அதாவது வரவு செலவு கணக்கை ஜமாத்தின் துணை பொருளாளர் ஜனாப். குத்தூஸ் அவர்கள் உறுப்பினர் மத்தியிலே வாசித்துக் காட்டினார்.

அழகிய கடன் திட்டத்தை பற்றியும் அது எப்படி செயல்படுகிறது, அதன் நோக்கம் என்ன என்பதை பற்றி எல்லாம் ஜமாஅத்தின் நிர்வாகி ஜனாப் இப்ராஹிம் கலிபுல்லாஹ் அவர்கள் எடுத்துரைத்தார்.

முக்கிய நிகழ்வாக ஜமாத் ஆரம்பித்த நாளிலிருந்து இந்த ஜமாத்திற்காக பாடுபட்ட பல நிர்வாகிகளுக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்திலே இந்த ஆண்டு 6 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஜமாத் சார்பாக கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

கௌரவிக்கப்பட்ட ஜமாத் நிர்வாகிகளின் பெயர்கள்

  1. முஹம்மது ஆரிப்
    பொருளாளர
  2. முஹம்மது ரபீக்
    பொதுச்செயலாளர்
  3. இக்பால் பாஷா
    சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர்
  4. சையத் சாதிக்
    ஊடக செயலாளர்
  5. நூருல் அமீன்
    அழகிய கடன் உதவி திட்ட பொறுப்பாளர்
  6. நிஜாமுதீன்
    செயற்குழு உறுப்பினர்

இறுதியாக ஜனாப் நூருல் அமீன் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிகழ்ச்சி நிறையுற்றது.

பெருவாரியான உறுப்பினர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7584/feed/ 0
கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/6800/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6800/#respond Sun, 12 Jun 2022 09:49:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6800 அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2022“, வருகின்ற ஜூன் 26-ம் தே‌தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. +2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற...

The post கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2022, வருகின்ற ஜூன் 26-ம் தே‌தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

+2 விற்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையும் நிர்ணயிக்கும். ஆகவே, இந்த முடிவினை தெளிவாக எடுக்க வேண்டும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு பல கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.

ஆதலால், நமது கோட்டக்குப்பத்தை சார்ந்த அனைத்து 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து கூகுள் படிவத்தையும் பூர்த்தி செய்து, தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(அல்லது)

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு உங்களுடைய பெயர், தந்தை பெயர், வயது, தொலைப்பேசி எண், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற விவரங்கள் டைப் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி தங்களின் வருகையை உறுதி செய்யலாம்.

10-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A.R.SATHIK BASHA: +91 8056515736
S. Julfi: +91 944207020

11 & 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள்:
A. Hajath Ali: +91 9944342179
Abdul Malik: +91 9790968698

மேலும், நமதூரை சார்ந்த 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் முதல் மூன்று மாணவர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

ஆகவே, இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6800/feed/ 0
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் சல்மான் பள்ளிவாசலுக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/6660/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%259c-5 https://www.kottakuppamtimes.com/6660/#respond Fri, 06 May 2022 17:22:48 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6660 கோட்டக்குப்பம் பஜார் வீதியில் அமைந்துள்ள சல்மான் பள்ளிவாசலுக்கு ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் மற்றும் மைக் பழுதடைந்து விட்டதால், புதிதாக வாங்கி தருமாறு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்திற்கு விண்ணப்பம் தெரிவித்து, கடந்த 11-04-2022 அன்று கோரிக்கை கடிதம் பெறப்பட்டது. கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாக குழுவில் ஆலோசிக்கப்பட்டு ஒரு கணிசமான தொகை, குவைத் ஜமாத் நிதியிலிருந்து தருவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். மேலும், பாக்கி தொகையை, குவைத் சுப்ரீம் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனர்...

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் சல்மான் பள்ளிவாசலுக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பஜார் வீதியில் அமைந்துள்ள சல்மான் பள்ளிவாசலுக்கு ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் மற்றும் மைக் பழுதடைந்து விட்டதால், புதிதாக வாங்கி தருமாறு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்திற்கு விண்ணப்பம் தெரிவித்து, கடந்த 11-04-2022 அன்று கோரிக்கை கடிதம் பெறப்பட்டது.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாக குழுவில் ஆலோசிக்கப்பட்டு ஒரு கணிசமான தொகை, குவைத் ஜமாத் நிதியிலிருந்து தருவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். மேலும், பாக்கி தொகையை, குவைத் சுப்ரீம் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனர் ஜனாப் A.M. அபூபக்கர் சித்தீக் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள்.

(05/05/2022) வியாழக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தாயகத்தில் இருக்கும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் சல்மான் பள்ளிவாசல் கோரிக்கை பூர்த்தி செய்ய அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரூபாய் 38,242 மதிப்புள்ள ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆகிய சாதனங்கள் சல்மான் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுப்ரீம் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனர் ஜனாப் A.M. அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கும் மற்றும் அவர்களின் நன்கொடையை பெற்றுத்தந்த கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாகி S.A. சையத் சாதிக் அவர்களுக்கு ஜமாத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் சல்மான் பள்ளிவாசலுக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6660/feed/ 0
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் தொகை வினியோகம். https://www.kottakuppamtimes.com/6503/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%259c-4 https://www.kottakuppamtimes.com/6503/#respond Sun, 01 May 2022 18:08:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6503 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் செய்து, கோட்டகுப்பத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 500 வீதம் 279 குடும்பங்களுக்கும் மற்றும் ரூபாய் 2000 ஹதியாவாக ஒரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. மேலும் ஃபித்ரா வசூல் செய்வதற்காக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும், ஃபித்ரா விநியோகம் செய்வதற்காக உறுப்பினர்களை தொடர்புகொண்டு உரிய பயனாளிகள் பட்டியல் தயார் செய்து சரியான முறையில் செயல்படுத்திய அனைத்து சகோதரர்களுக்கும் மற்றும் சிறப்பான முறையில் வினியோகம் செய்த கோட்டக்குப்பம்...

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் தொகை வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் செய்து, கோட்டகுப்பத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 500 வீதம் 279 குடும்பங்களுக்கும் மற்றும் ரூபாய் 2000 ஹதியாவாக ஒரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.

மேலும் ஃபித்ரா வசூல் செய்வதற்காக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும், ஃபித்ரா விநியோகம் செய்வதற்காக உறுப்பினர்களை தொடர்புகொண்டு உரிய பயனாளிகள் பட்டியல் தயார் செய்து சரியான முறையில் செயல்படுத்திய அனைத்து சகோதரர்களுக்கும் மற்றும் சிறப்பான முறையில் வினியோகம் செய்த கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தாயகத்தில் இருக்கும் ஜமாத் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் தொகை வினியோகம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6503/feed/ 0