iuml Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 19 Dec 2023 15:40:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg iuml Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு. https://www.kottakuppamtimes.com/8450/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25af%25e0%25af%2582%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/8450/#respond Tue, 19 Dec 2023 15:40:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8450 கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருந்ததை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் கோட்டக்குப்பம் பகுதியை 27 வார்டுகளாக பிரித்து முதல் நகராட்சி தேர்தல் நடைபெற்று. அந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றது. பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் அதற்கேற்ற உட் கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய நகராட்சி அலுவலக கட்டுவது என்று அரசால் தீர்மானிக்கப்பட்டது....

The post இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருந்ததை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் கோட்டக்குப்பம் பகுதியை 27 வார்டுகளாக பிரித்து முதல் நகராட்சி தேர்தல் நடைபெற்று.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றது. பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் அதற்கேற்ற உட் கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய நகராட்சி அலுவலக கட்டுவது என்று அரசால் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது நகர் மன்ற தலைவர் திரு ஜெயமூர்த்தி அவர்கள் சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவில் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு என்று புதிய கட்டிடம் கட்டப்படும். அந்தக் கட்டிடம் தற்போதைய அலுவலகம் எதிரே அமைந்துள்ள நகராட்சி திடலில் கட்டப்படும் என்றும் சுதந்திர தின விழாவில் பொது அறிவிப்பாக அறிவித்தார்கள்.

அனைத்து தரப்பு மக்களின் விருப்பம் நகராட்சி திடலிலேயே கட்டுவது என்பதாக அமைந்திருக்கும் நிலையில், நகர மன்ற தலைவரும் பொது அறிவிப்பு செய்து விட்ட நிலையில், தற்பொழுது நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்காக நகராட்சி ஆணையர் மூலம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றது.

பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக நகர் மன்ற தலைவர் அரசு விழாவில் பொது அறிவிப்பாக அறிவித்த நிலையில் தற்போது வேறு இடத்தில் கட்டுவதற்கு முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது.

பெரும்பாலான பொது மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக மற்றும் பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கும் நிலையில் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதை உடனடியாக மறுபரிசீலனை செய்து அனைத்து மக்களின் விருப்பப்படி நகராட்சி எதிரில் உள்ள இடத்தில் நகர மன்ற அலுவலகத்தை கட்ட வேண்டும் என்று கோட்டக்குப்பம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நகராட்சி ஆணையாளர், மற்றும் நகர்மன்ற தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோட்டக்குப்பம் நகர இந்தியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி இஹ்சனுல்லாஹ், நகர செயலாளர் முஹம்மது ஃபாருக், மாநில STU தொழிலாளர் அணி பொதுச் செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட அமைப்பு செயலாளர் பிலால் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

The post இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8450/feed/ 0
வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை https://www.kottakuppamtimes.com/5476/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a3-%25e0%25ae%25b5%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/5476/#respond Thu, 23 Dec 2021 15:41:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5476 வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி, இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை.

The post வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை appeared first on Kottakuppam Times.]]>
வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி, இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை.

The post வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5476/feed/ 0
கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு. https://www.kottakuppamtimes.com/5279/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a-2 https://www.kottakuppamtimes.com/5279/#respond Sun, 31 Oct 2021 15:06:19 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5279 கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது உள்ளிட்ட ஐந்து வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு. விழுப்புரம் மாவட்ட (கிழக்கு) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் கூட்டம் 31-10-2021 இன்று கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மாவட்ட தலைவர் விஆர் முஹமது இப்ராஹிம் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி...

The post கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது உள்ளிட்ட ஐந்து வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு.

விழுப்புரம் மாவட்ட (கிழக்கு) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் கூட்டம் 31-10-2021 இன்று கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மாவட்ட தலைவர் விஆர் முஹமது இப்ராஹிம் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி தலைமையில் நடைபெற்றது.

இந்தப் மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடுதல் போன்ற முக்கிய செய்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கோட்டக்குப்பம், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் போட்டி இடுதல் போன்ற விஷயங்கள் குறித்து விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் பிலால் முஹம்மது, கோட்டக்குப்பம் நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஆர்.முஹம்மது இபுராஹிம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

செஞ்சி பேரூராட்சியில் ஐந்து வார்டுகளில் போட்டியிடுவது என்றும், திண்டிவனம் நகராட்சியில் ஐந்து வார்டுகளில் போட்டியிடுவது, என்றும் விழுப்புரம் நகராட்சியில் 3 வார்டுகளில் போட்டியிடுவது என்றும் அந்தந்த பொறுப்பாளர்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

அதேபோன்று கோட்டக்குப்பம் நகராட்சியில் முஸ்லிம் லீக் 8, 9, 10, 12 மற்றும் 15-வது உள்ளிட்ட 5 வார்டுகளில் போட்டியிடுவது என்றும், அதற்கான வேட்பாளர்களையும் அடையாளம் காணப்பட்டு அதை மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) தற்போதைய கட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ஊர்களிலும் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது

2) கட்சி பிரைமரி இல்லாத இடங்களில் புதிய பிரைமரிகளை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

3) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய பேரூராட்சி நகராட்சிகளில் வெற்றி வாய்ப்புள்ள அதிக இடங்களில் போட்டியிடுதல் என்றும் கோட்டக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை முஸ்லிம் லீகிற்கு ஒதுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

4) திரிபுராவில் நடைபெறும் கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்தி சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டுமென்றும், கொடூர தாக்குதலை நடத்தி வரும் திரிபுரா பாஜக அரசை கண்டித்தும் இந்த கலவரத்தை உடனடியாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

5) அனைத்து தரப்பு மக்களின் துயரங்களை சிறிதேனும் கருத்தில் கொள்ளாமல், தினம் தினம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை விலையை உயர்த்தி மக்களை பெரும் கஷ்டத்தில் ஆட்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6) அனைத்து பகுதிகளிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

7) மேலும் கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12, 15 ஆகிய 5 வார்டுகளில் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களும், மாவட்ட தலைவர் வி.ஆர். முகமது இப்ராஹிம், அவர்களும் மாவட்ட துணை செயலாளர்கள் விழுப்புரம் சுல்தான் மொய்தீன், கோட்டக்குப்பம் அமீர் பாஷா அவர்களும், விழுப்புரம் மாவட்ட துணை தலைவர் செஞ்சி ஷபியுல்லா மாவட்ட பொருளாளர் அப்துல் கனி, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முகமது, விழுப்புரம் நகர தலைவர் கபார், திண்டிவனம் நகர தலைவர் வழக்கறிஞர் கபீர், செயலாளர் சபி, கோட்டக்குப்பம் நகர தலைவர் இஹ்சானுல்லா,செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் கமல் முஸ்தபா, துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர இளைஞரணி தலைவர் அமீன், செயலாளர் தீன், கோட்டக்குப்பம் நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல் கரீம், மாவட்ட எம் எஸ் எஸ் பொறுப்பாளர்கள் முகம்மது அலி, முஹம்மது உசேன், நகர தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் முகமது யாசின், இனாயத்துல்லாஹ், ரஹ்மத் நகர் பொறுப்பாளர் செய்யது, நகர எம் எஸ் எஸ் பொறுப்பாளர்கள் ஹாஜாத் அலி, சேட், கோட்டக்குப்பம் நகர இளைஞரணி செயல்வீரர் அப்பாஸ், திண்டிவனம் நகர முக்கிய பொறுப்பாளர்கள், செஞ்சி நகர முக்கிய பொறுப்பாளர்கள், விழுப்புரம் நகர முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக நிகழ்ச்சியில் தாய் சபையின் செயல்பாடுகள் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதின் அவசியத்தை குறித்தும், நகரமன்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதின் வழிமுறை குறித்து மண்டல பொறுப்பாளர் அப்துர் ரஹ்மான் ரப்பானி அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.

அனைத்து பொறுப்பாளர்களுக்கும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் உறுப்பினர் விண்ணப்பப் படிவம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டைகள் மண்டல பொறுப்பாளர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வழங்கினார்கள்.

இறுதியில் விழுப்புரம் சுல்தான் மொய்தீன் நன்றி தெரிவித்தார்.

The post கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5279/feed/ 0
கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு! https://www.kottakuppamtimes.com/5206/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/5206/#respond Wed, 22 Sep 2021 07:25:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5206 சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் மின்தடையை ஒழுங்குபடுத்தி சரியான மின் வினியோகம் வழங்க வேண்டும், மேலும் கோட்டக்குப்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய மின் கம்பிகளை, மின்சார தளவாட பொருட்களை அகற்றி விட்டு, புதிய மின்...

The post கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு! appeared first on Kottakuppam Times.]]>
சமீபகாலமாக கோட்டக்குப்பம் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், இணைய வழி கல்வி கற்கும் மாணவ/மாணவிகளும், வியாபார பெருமக்களும், தொழில் கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அடிக்கடி ஏற்படும் மின்தடையை ஒழுங்குபடுத்தி சரியான மின் வினியோகம் வழங்க வேண்டும், மேலும் கோட்டக்குப்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய மின் கம்பிகளை, மின்சார தளவாட பொருட்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பிகளை பெறுத்தி பழுதுபட்ட மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும், மின்னழுத்தம் சீராக இல்லாத பகுதிகளில் புதிய மின் மாற்றி அமைக்க கோரியும், மேலும் மின் தடைக்கு பெரிதும் காரணமாக கருதப்படும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டி வலியுறுத்தியும் இன்று கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் அவர்களிடம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாவட்ட தலைவர் வி. ஆர். முஹம்மது இப்ராஹிம் தலைமையில் மனு வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட மனுவை பெற்றுக்கொண்டு அதில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகளை ஏற்று, இந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில வாரங்களில் இந்த குறைகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்.

இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முகமது, நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர இளைஞரணி தலைவர் அமீன், நகர துணைத் தலைவர் அலி அகமது, விழுப்புரம் மாவட்ட எம் எஸ் எஃப் பொறுப்பாளர்கள் முஹம்மது அலி, முஹம்மதுஉசைன், நகர எம்எஸ் எஃப் பொறுப்பாளர்கள் ஹாஜாத் அலி, சேட்டு, முகமது காலித், நகர இளைஞரணி அப்பாஸ், திமுக 8-வது வார்டு கிளை செயலாளர் பாபு மற்றும் ரஹ்மானியா பள்ளிவாசல் முத்தவல்லி அஷ்ரப் அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5206/feed/ 0
மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/5189/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25af%258b https://www.kottakuppamtimes.com/5189/#respond Mon, 20 Sep 2021 07:14:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5189 மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டனர்....

The post மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டனர்.

விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஆர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முஹம்மது, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர செயலாளர் முஹம்மது பாரூக், நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், பத்திரிக்கையாளர் அலி அகமது, நகர இளைஞரணி தலைவர் SMJ அமீன், இளைஞர் அணி செயலாளர் சம்சுதீன், MSF மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது அலி, நகர MSF பொறுப்பாளர் ஹாஜாத் அலி, சேட்டு, காலித் மற்றும் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் அப்துல் கரீம், நகர மார்க்க அணி பொறுப்பாளர் மவ்லவி ஃபக்ருதீன் பாரூக் ஜமாலி, முன்னாள் நகர இளைஞரணி தலைவர் அப்துர் ரஹ்மான், அல் ரஃபி மற்றும் பலர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

The post மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5189/feed/ 0
முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/5178/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b2%25e0%25af%2580%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/5178/#respond Fri, 17 Sep 2021 12:49:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5178 நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கோட்டக்குப்பத்தில் அடிப்படைத் தேவைகளான மகப்பேறு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகம், பத்திரப்பதிவு அலுவலகம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கடந்த 12- 9 -2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்கள் அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது....

The post முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கோட்டக்குப்பத்தில் அடிப்படைத் தேவைகளான மகப்பேறு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகம், பத்திரப்பதிவு அலுவலகம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கடந்த 12- 9 -2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானங்கள் அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த தீர்மான நகலையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்ட நகல்களையும் கோட்டக்குப்பத்திற்கு தேவையான சில அடிப்படை கோரிக்கைகளை தொகுத்து மனுவாக புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் கோட்டக்குப்பம் செயல் அலுவலர் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

முன்னதாகவே புதிதாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாவட்டத் தலைவர் வி. ஆர். முஹம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, மாவட்ட இளைஞரணி தலைவர் பிலால் முஹம்மத், நகர செயலாளர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலையில் பொன்னாடை போற்றி வரவேற்கப்பட்டது.

இந்த சந்திப்பில் கோட்டக்குப்பம் கிழக்குப் பகுதியான வேங்கை தெரு, உமறுப்புலவர் தெரு, மாமுலப்பை தெரு, பெரிய தெரு, காஜியார் வீதி, தைக்கால் தெரு, நாட்டாண்மை தெரு, மோர் சார் தெரு. ஹாஜி உசேன் தெரு, பட்டினத்தார் தெரு, உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாததையும், குடிநீர் சுவையாக இல்லாததையும் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும் சில இடங்களில் தினசரி குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ஆவணம் செய்வதாக உறுதி அளித்து உள்ளார்கள்.

இந்த சந்திப்பில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர இளைஞரணி தலைவர் அமீன் செயலாளர் தீன், MSF மாவட்ட பொறுப்பாளர்கள் முகமது ரபிக், முகமது அலி, முகமது உசேன், நகரத் தொழிலாளர் அணி நூருல் அமீன், நகர MSF பொறுப்பாளர்கள் ஆசாத், காலித், இளைஞரணி அப்பாஸ், முகமது யூனுஸ் அஸ்ரப் அலி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

The post முஸ்லிம் லீக்கின் தீர்மானங்கள் கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5178/feed/ 0
கோட்டக்குப்பத்தில் சமுதாய வழிகாட்டி காயிதேமில்லத் 126-வது பிறந்த நாள் விழா. https://www.kottakuppamtimes.com/4573/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/4573/#respond Sat, 05 Jun 2021 08:28:05 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4573 ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் வழிகாட்டியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் தலைவருமாகிய கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம்லீக் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக கோட்டக்குப்பம் காயிதே மில்லத் வளைவு அருகில் முஸ்லிம் லீக்கின் பிறைக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் குட்டவாப்பு, மோர்சார் தெரு...

The post கோட்டக்குப்பத்தில் சமுதாய வழிகாட்டி காயிதேமில்லத் 126-வது பிறந்த நாள் விழா. appeared first on Kottakuppam Times.]]>
ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் வழிகாட்டியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் தலைவருமாகிய கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம்லீக் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக கோட்டக்குப்பம் காயிதே மில்லத் வளைவு அருகில் முஸ்லிம் லீக்கின் பிறைக் கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் குட்டவாப்பு, மோர்சார் தெரு சந்திப்பில் நகர இளைஞரணி சார்பாக முஸ்லிம் லீக் கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏழை குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை ஏழைகளுக்கு இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம், நகர தலைவர் இஹ்சானுல்லாஹ், நகர செயலாளர் முஹம்மது பாரூக், விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முஹம்மத், விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது இலியாஸ், நகர இளைஞரணி தலைவர் அமீன்,
நகர இளைஞரணி செயலாளர் தீன், நகர இளைஞரணி பொறுப்பாளர் அப்துல் கரீம், மாவட்ட MSF பொறுப்பாளர்கள் முகமது ரபிக், முகமது அலி, முகமது உசேன், நகர MSF பொறுப்பாளர்கள் ஹாஜாத் அலி, சேட்டு, நகர துணை செயலாளர் ஹாமிது பாஷா,
நகர தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் நூருல் அமீன், இனாயத்துல்லா, ரப்பானியா அரபிக்கல்லூரி செயலாளர் முஸ்தபா, நகர பொருளாளர் கமால் முஸ்தபா, நகர இளைஞரணி முன்னாள் தலைவர் உபயதுல்லா,
நகர இளைஞர் அணி பொறுப்பாளர்கள் வாஹித், இம்ரான், உபைத், அப்பாஸ், மசூதி, மூஸா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான்,
நகர மூத்த உறுப்பினர்கள் முஹம்மது உசேன் ஜக்கரியா மற்றும் தாய்ச்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நகர உலமாக்கள் அணி பொறுப்பாளர்கள் மவுலவி ஹாமீம் பாஷா ரப்பானி அவர்களும் மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி அவர்களும் துவா ஓதி சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள், பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் சமுதாய வழிகாட்டி காயிதேமில்லத் 126-வது பிறந்த நாள் விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4573/feed/ 0
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/4414/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25a9 https://www.kottakuppamtimes.com/4414/#respond Thu, 13 May 2021 12:24:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4414 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிலைய உத்தரவுக்கு இணங்க பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அடாவடித்தனத்தையும் ஆக்கிரமிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கோட்டகுப்பத்தில் நகர நிர்வாகிகள் இஸ்ரேல் அரசை கண்டித்தும் பாலஸ்தீன விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நகர தலைவர் இஹ்சானுல்லாஹ் முன்னிலையிலும் நகர செயலாளர்...

The post பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிலைய உத்தரவுக்கு இணங்க பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அடாவடித்தனத்தையும் ஆக்கிரமிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி கோட்டகுப்பத்தில் நகர நிர்வாகிகள் இஸ்ரேல் அரசை கண்டித்தும் பாலஸ்தீன விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர் வி ஆர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நகர தலைவர் இஹ்சானுல்லாஹ் முன்னிலையிலும் நகர செயலாளர் முகமது பாரூக், மாவட்ட துணைச் செயலாளர் அமீர் பாஷா, மாவட்ட இளைஞரணி தலைவர் பிலால் முஹம்மத், நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் முகமது அலி ரஃபிக், நகர இளைஞரணி தலைவர் அமீன், செயலாளர் தீன் நகர இளைஞரணி பொறுப்பாளர் கரீம் மூத்த நிர்வாகி முகம்மது உசேன் மற்றும் பஹருள் இஸ்லாம் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

The post பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4414/feed/ 0