education guidance program Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 24 Dec 2023 06:49:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg education guidance program Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/8469/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be-8 https://www.kottakuppamtimes.com/8469/#respond Sun, 24 Dec 2023 06:49:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8469 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மாணவரணி சார்பாக கோட்டக்குப்பம் பரகத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சல்மான் பார்ஃசி அவர்கள் தலைமையில் இன்று (24-12-2023) பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, எவ்வாறு எளிய முறையில் மனனம் செய்வது...

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மாணவரணி சார்பாக கோட்டக்குப்பம் பரகத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சல்மான் பார்ஃசி அவர்கள் தலைமையில் இன்று (24-12-2023) பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, எவ்வாறு எளிய முறையில் மனனம் செய்வது என்ற முறைகளை கல்வியாளர்கள் அஷ்ரப் அலி, முஹம்மத் ஆசாத் ஆகியோர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் அணி செயலாளர் உசேன் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

The post கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8469/feed/ 0
கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் https://www.kottakuppamtimes.com/6844/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-3 https://www.kottakuppamtimes.com/6844/#respond Sun, 26 Jun 2022 06:15:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6844 கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு...

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.

நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு செய்வது போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறந்த கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். மேலும் இன்று நடைபெறும் “கல்வி வழிகாட்டி 2022” நிகழ்வில் பொது மேடையில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களுடன், ஒவ்வொரு மாணவ மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் நேரடி கள அனுபவங்களையும் பகிர உள்ளனர்.

ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6844/feed/ 0