arsenic album 30 Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 16 Jul 2020 06:36:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg arsenic album 30 Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக வழக்கப்பட்டுவருகிறது. https://www.kottakuppamtimes.com/2486/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f-6 https://www.kottakuppamtimes.com/2486/#respond Thu, 16 Jul 2020 06:36:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2486 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன் அடிப்படையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி, சுகாதாரத் துறை மற்றும் கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் அவர்கள் இணைந்து, கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக சென்று வழக்கப்பட்டுவருகிறது. பயன்படுத்தும் முறை : நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் ‘3 நாள்களுக்கு’ காலை மட்டும்...

The post கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக வழக்கப்பட்டுவருகிறது. appeared first on Kottakuppam Times.]]>
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர்.

அதன் அடிப்படையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி, சுகாதாரத் துறை மற்றும் கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் அவர்கள் இணைந்து, கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக சென்று வழக்கப்பட்டுவருகிறது.

பயன்படுத்தும் முறை :

நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் ‘3 நாள்களுக்கு’ காலை மட்டும் 4 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

12-வயதுகுள் இருக்கும் சிறுவர்களுக்கு 2 மாத்திரை எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்க் கிருமி மனித உடலுக்குள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது. மனிதனின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலைத் தூண்டி சுவாச உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. இதனால் உடலில் நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். இதன் மூலமாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும்போது கூட அதன் பெருக்கத்தைத் தடை செய்து வெளியேற்றுவதனால் உடலை வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது.

இந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்படக் கூடியது.

எனவே, கொரோனா தொற்று நம்மை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என இந்த ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.

The post கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக வழக்கப்பட்டுவருகிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2486/feed/ 0
கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இரண்டாம் கட்டமாக ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/2433/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595-3 https://www.kottakuppamtimes.com/2433/#respond Thu, 09 Jul 2020 18:03:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2433 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்கக்கூடிய “ஆர்சனிக் ஆல்பம் 30” என்ற ஹோமியோபதி மருந்தை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நமது கோட்டக்குப்பம் பகுதியில் சென்ற சனிக்கிழமை அன்று 500 குடும்பங்களுக்கு அந்த ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டு மக்கள் பயன் படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக பரகத் நகர் பகுதியில் சுமார் 250 குடும்பத்தினர்களுக்கு அந்த மருந்து வழங்கப்பட்டது. அதனைத்...

The post கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இரண்டாம் கட்டமாக ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்கக்கூடிய “ஆர்சனிக் ஆல்பம் 30” என்ற ஹோமியோபதி மருந்தை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி நமது கோட்டக்குப்பம் பகுதியில் சென்ற சனிக்கிழமை அன்று 500 குடும்பங்களுக்கு அந்த ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டு மக்கள் பயன் படுத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக பரகத் நகர் பகுதியில் சுமார் 250 குடும்பத்தினர்களுக்கு அந்த மருந்து வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜமியத் நகர், சமரச நகர் மற்றும் கோரி தோப்பு பகுதியிலும், இந்த மருந்து மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மிஸ்வாக் குழுவினர் பிலால் முஹம்மது, முகம்மது ரஃபி, ஆஜாத் அலி, சர்புதீன் சேட்டு, முஹம்மது அலி, அமீர் பாஷா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பரகத் நகர் முத்தவல்லி பஷீர் அஹமது, முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் இஹ்சானுல்லா, பரக்கத் நகர் துணை செயலாளர் முஹம்மது ஷரிப், பரகத் நகர் நிர்வாகி பாருக் மரைக்காயர், சமரசமாக முத்தவல்லி மௌலவி முஹம்மது சித்தீக், ஜமாத்துல் உலமா செயலாளர் மௌலவி அப்துல் காதர், ஜமியத் நகர் ஹஜ், ஆசிப் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

The post கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இரண்டாம் கட்டமாக ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2433/feed/ 0
கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது. https://www.kottakuppamtimes.com/2362/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595-2 https://www.kottakuppamtimes.com/2362/#respond Sat, 04 Jul 2020 13:45:41 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2362 உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா நோய்த்தொற்று தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க அரசு பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுடன் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி சரியானா அளவில் இருக்கும் நபர்களுக்கு இந்த கொரோனா தாக்கினாலும் அதிலிருந்து மீண்டு வரமுடியும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை கொரானா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கினால்...

The post கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா நோய்த்தொற்று தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

அதனை தடுக்க அரசு பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுடன் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி சரியானா அளவில் இருக்கும் நபர்களுக்கு இந்த கொரோனா தாக்கினாலும் அதிலிருந்து மீண்டு வரமுடியும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை கொரானா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கினால் பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறிவருகிறார்கள்.

இந்திய ஆயுஷ் அமைச்சகம் நோய்த் தொற்றைத் தடுக்க உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய, “ஆர்சனிக் ஆல்பம் 30” என்கிற ஹோமியோபதி மருந்தை உட்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது.

அதன்படி தமிழக அரசும் அந்த மருந்தை அனைவரும் உட்கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்துள்ளது.

நோய்த்தொற்று எண்ணிக்கை இல்லாமலிருந்த நமது பகுதியில் தற்போது ஒருசில நோய் தொற்று இருப்பதை காணமுடிகிறது. இதிலிருந்து மக்களை காக்க மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஹோமியோபதி மருந்து அனைவரும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துங்கள் என்றும். அதை நீங்களே வழங்குங்கள் என்றும் நமது கோட்டகுப்பம் டிஎஸ்பி அவர்கள் நமக்கு அறிவுறுத்தினார்கள்.

அதை ஏற்று கோட்டக்குப்பம் பகுதியிலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம் என்பதை கோட்டகுப்பம் செயல் அலுவலர் அவர்களுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்த நிலையில் அவர்களும் இதை தாராளமாக செய்யுங்கள் என்று ஒப்புதல் அளித்தனர்.

அதன்படி இன்று 04-07-2020 சனிக்கிழமை, காலை 10 மணி அளவில் முதற்கட்டமாக 500 குடும்பங்களுக்கு, அதாவது சுமார் 4000 நபர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு இன்று அந்த ஆர்சனிக் ஆல்பம் 30 என்கிற மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் திடலில், காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை கோட்டகுப்பம் செயல் அலுவலர் அவர்களும் சுகாதாரத் துறை ஆய்வாளர் ரவி அவர்களும் கலந்து கொண்டு இந்த மருந்தின் பலன் குறித்து மக்களுக்கு எடுத்து வைத்தனர்.

இந்த மருந்தை அனைவரும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

அதேபோன்று நோய் பரவலை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். மேலும் அவர்கள் இந்த மருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து நமது ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி பாருக் அவர்களும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது அவர்களும், முன்னாள் முத்தவல்லிகள் இஹ்சானுல்லா மற்றும் பகுருதீன் ஜமாலி அவர்களும், பட்டினத்தார் தெரு ரஹ்மானியா பள்ளி செயலாளர் வி.ஆர் இப்ரஹிம் அவர்களும், புஸ்தனியா பள்ளி முத்தவல்லி அப்துல் ஹக்கீம் அவர்களும், ரஹ்மத் நகர் முத்தவல்லி சாகுல் ஹமீது அவர்களும், பரக்கத் நகர் இணை முத்தவல்லி பிலால் முஹம்மத் அவர்களும் கலந்து கொண்டு இந்த மருந்து உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதன்படி மருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த மருந்து வழங்கப்படும் தகவலறிந்து பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக வந்து தங்களின் விபரங்களை தெரிவித்து மருந்துகளை வாங்கி சென்றனர். நாம் முதல்கட்டமாக 500 குடும்பங்களுக்கு, அதாவது 4000 நபர்கள் உட்கொள்ளக் கூடிய அளவிற்கு மருந்துகளை வைத்திருந்தனர்.

அதிகப்படியான மக்கள் வந்த காரணத்தினால், இரண்டாம் கட்ட முகாமில் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு, மருந்தை கிடைக்கப்பெறாதவர்களுக்கு பின்னர் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை மிஸ்வாக் குழுவினர் – மிஸ்வாக்கின் செயலாளர் முகமது ரபி, மிஸ்வாக் பொருளாளர் ஆசாத் அலி, மிஸ்வாக் துணைத்தலைவர் சர்புதீன், செயற்குழு உறுப்பினர் முகமது அலி மற்றும் காலித் இவர்களுடன் மீடியா சாதிக் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். மிஸ்வாக் செயற்குழு உறுப்பினர்கள் சித்தீக் மரைக்காயர் ஏ.ஆர் சாதிக் பாஷா ஆகியோர் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார்கள்.

இறுதியாக இந்த நிகழ்ச்சி வந்த அனைவருக்கும் மிஸ்வாக்கின் செய்தித்தொடர்பாளர் அமீர் பாஷா அவர்கள் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இது மிக முக்கியமான நிகழ்ச்சி இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று மிஸ்வாக் குழுவிற்கு அறிவுரை கூறினார்கள்.

இந்த மருந்தினை வாங்க ஆர்வம் காட்டிய மக்களுக்கு மிஸ்வாக் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சியில் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி மருந்துகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிஸ்வாக் குழுவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்திய நிலையில் மக்கள் அனைவரும் சூழ்நிலையை கருதி தங்களை தாங்களே தயார் படுத்தி சமூக இடைவெளியுடன் மருந்துகளை வாங்கிச் சென்றது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

The post கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2362/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரானாவில் இருந்து தற்காத்துக்கொள்ள “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட இருக்கிறது. https://www.kottakuppamtimes.com/2315/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/2315/#respond Fri, 03 Jul 2020 06:00:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2315 கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர். ஆதலால் கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக, முதல்கட்டமாக 500 குடும்பங்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் வழங்கப்பட இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு...

The post கோட்டக்குப்பத்தில் கொரானாவில் இருந்து தற்காத்துக்கொள்ள “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட இருக்கிறது. appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர்.

ஆதலால் கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக, முதல்கட்டமாக 500 குடும்பங்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் வழங்கப்பட இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ (arsenic album 30C) என்ற மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை மட்டும் 4 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 3 நாள்களுக்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அடுத்தடுத்த வாரங்களில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுவின் (ஐஹெச்எம்எல்) திருச்சி கிளையின் செயலர் மருத்துவர் எஸ். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சளி, இருமல், நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும். கொரோனா வைரஸுக்கு எதிர்த்துப் போரிட இந்த மருந்தானது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்க் கிருமி மனித உடலுக்குள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது. மனிதனின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலைத் தூண்டி சுவாச உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. இதனால் உடலில் நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். இதன் மூலமாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும்போது கூட அதன் பெருக்கத்தைத் தடை செய்து வெளியேற்றுவதனால் உடலை வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது.

இந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்படக் கூடியது.

எனவே, கரோனா தொற்று நம்மை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என இந்த ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் டி. மாலினி, ‘சளி, இருமல் போன்ற வைரஸ் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், மேற்குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலமாக வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் பரிந்துரைப்படி நமதூர் மக்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த ஹோமியோபதி மருந்தை நாம் அனைவரும் மேற்சொன்ன வழிமுறைப்படி உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்திக் கொள்வோம்.

கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்வோம்.

அன்புடன்
மிஸ்வாக் குழுவினர் கோட்டக்குப்பம்.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

The post கோட்டக்குப்பத்தில் கொரானாவில் இருந்து தற்காத்துக்கொள்ள “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட இருக்கிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2315/feed/ 0