கோட்டக்குப்பம் நகராட்சியின் 17-வது வார்டு பகுதியில், நாட்டின் 77-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு. ரஹ்மத்துல்லா அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் குடியரசு தினச் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் ஊரின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.






