February 3, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 77-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26, 2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைப் போற்றும் வகையில், கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மதரசா மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்று குடியரசு தின விழாவைச் சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அலங்கரிக்கப்படும் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் புஸ்தானிய்யா பள்ளிவாசல்கள்!

கோட்டக்குப்பத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்…!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி….

Leave a Comment