February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி

கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் ஜெயமூர்த்தி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவரும் வணிகர் சங்கத் தலைவருமான முபாரக் அவர்கள் அனைவருக்கும் வரவேற்றுப் பேசினார்.

சங்கச் செயலாளர் அப்துல் ரவூப் துணைத்தலைவர் பூபாலன், பொருளாளர் பழனி, முதன்மைத் தலைவர் ரபீக், கௌரவத் தலைவர் சாகுல் அமீது துணைச்செயலாளர் பிலால் முஹம்மது ஆகியோர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் அனைத்து வியாபாரிகளும், நகராட்சி மன்ற உறுப்பினர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

KIWS சார்பாக குழைந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியின் நிலைக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

Leave a Comment