May 10, 2025
Kottakuppam Times
Uncategorized

ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள்.

தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டக்குப்பதில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அழைப்பு பத்திரிகைகளைக் காண்பிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

மேலும் ரோந்து வாகனங்கள் மூலம், போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி

டைம்ஸ் குழு

Leave a Comment