29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைப்பு.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள், சுகாதாரத் துறை வல்லுநா்கள் உள்ளிட்டோருடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கத்தார் வாழ் கோட்டகுப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்சிலர்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை.

டைம்ஸ் குழு

Leave a Comment