25.6 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் எரிபொருளின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்துவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தவகையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி அருகில் “கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கட்சி” சார்பில் பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கொடியை சைக்கிளில் கட்டி, மகிமை கேட்டு முதல் கோட்டக்குப்பம் பேரூராட்சி வரை சைக்கிள் பேரணி நடத்தப்பட்டு, கோட்டக்குப்பம் பேரூராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் முஹம்மது பாருக் தலைமையில் நடைபெற்றது. இதில் கண்டன உரை M.I. அப்துல் ஹக்கீம் மாவட்ட விவசாய அணி தலைவர் முன்னிலை, K.நசீர் அஹமத் என்கிற பாரூக் மற்றும் பொருளாளர் A.R.T.ஆதி, மீனவரின் தலைவர் ஜானகிராமன், நகர ஓபிசி பிரிவு தலைவர் M.T.அன்சாரி , நகர துணைத்தலைவர்கள் ரஹ்மத்துல்லாஹ், சாதிக் பாஷா, நகர செயலாளர் பங்களா சாதிக் மற்றும் சுந்தரமூர்த்தி, பொதுச்செயலாளர் ஏ நசீர் பாஷா, U. அனீஸ், சாகுல் அமீது, செயற்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், பாபு மற்றும் நகர மீனவர் அணி தலைவர் சங்கர், வானூர் வட்டார செயலாளர் அகமதுல்லா, சின்ன கோட்டகுப்பம் ஆறுமுகம், குமார், மாணவர் காங்கிரஸ் செயலாளர் பைஜுர் ரஹ்மான் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment