20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
பிற செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் மு.யா.முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.எம்.ஷாஜகான், மாநில வா்த்தக அணி பொருளாளா் அப்துல் ஹக்கீம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், விழுப்புரம் நகரத் தலைவா் அலி அக்பா், மாவட்ட துணைச் செயலாளா் ஜாமிஆலம் ராவுத்தா்அஷ்ரப் அலி உள்பட பலா் பங்கேற்றனா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.

8 மாதங்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு

புற்றுநோய் அனுக்களை அழிக்க பயன்படும் மஞ்சள்.

Leave a Comment